"9 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டு வருகிறோம்!’’ - லட்சுமி விலாஸ் வங்கி...

சோ.கார்த்திகேயன்

ங்கிப் பங்குகள் என்றாலே ஒதுங்கி இருக்கிறார்கள் முதலீட்டாளர்கள். காரணம், வங்கிகளின் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதே. இந்தப் பிரச்னையினால் பல வங்கிகளின் வளர்ச்சி, கடந்த பல காலாண்டுகளாகவே இறக்கத்தில் இருக்கிறது.
 
ஆனால், லட்சுமி விலாஸ் வங்கி மட்டும் இதில் வித்தியாசம். கடந்த ஓராண்டு காலத்தில் இந்த வங்கியின் பங்கு விலை சுமார் 70 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சிக் கண்டிருக்கிறது. தனியார் வங்கிகளில் இந்த அளவு வளர்ச்சி கண்ட வங்கி வேறு எதுவும் இல்லை.
 
 மேலும், கடந்த வாரம் வெளியான இந்த நிதி ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டில் இந்த வங்கியின் லாபம் சுமார் 44% அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில், இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.எஸ்.வெங்கடேஷ் நமக்கு அளித்த பேட்டி இனி:

கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி, வருகிற 2016 நவம்பர் 3-ம் தேதி அன்று 90-ம் ஆண்டை நிறைவு செய்யப்போகிறது.  வங்கியின் செயல்பாடுகள் இப்போது எப்படி உள்ளன?

‘‘1926-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தை மையமாக வைத்து இயங்கிவரும் ஒரே ஒரு வங்கி லட்சுமி விலாஸ் வங்கி மட்டுமே. இந்த வங்கி கரூரில் ஆரம்பிக்கப்பட்டாலும்,   2014-ல் இதன் கார்ப்பரேட் அலுவலகம் சென்னைக்கு மாற்றப்பட்டது. அந்தக் காலத்தில் ஒரே ஒரு  கிளையைத் தொடங்கி, அந்த வங்கியின் நெட்வொர்க்கை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து, இப்போது 460 கிளைகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறோம். வருமானம், நிகர லாபம், செயல்பாட்டு லாபம், வேலைவாய்ப்பு உருவாக்கம் என அனைத்திலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறோம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்