கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

சோ.கார்த்திகேயன்

ஞ்சள், சீரகம், சோயாபீன்ஸ், கடுகு, ஏலக்காய் ஆகிய கமாடிட்டிகளின் விலைப்போக்கு குறித்து விளக்குகிறார் அலைஸ் புளூ நிறுவனத்தின் தலைவர் கே.ராஜேஷ். 

மஞ்சள்!

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் மஞ்சள் நவம்பர் மாத கான்ட்ராக்ட் கடந்த வாரம் அதிகபட்சமாக 7,240 என்ற விலையிலும், குறைந்தபட்சமாக 7,082 என்ற விலையிலும் வர்த்தகமானது. மஞ்சளைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 7,000 என்ற விலையில் நல்ல சப்போர்ட் நிலைமையில் காணப்படுகிறது.

இந்தியாவில் மஞ்சள் உற்பத்தி செய்யப்படும் பகுதிகள் மற்றும் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் இதன் விலை குறைந்த அளவிலேயே உள்ளது.

 எனினும், வரும் நாட்களில் இதன் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் நீண்ட கால அடிப்படையில் தற்போதைய விலையிலேயே வாங்கிக்கொள்ளலாம். ரூ.6,700 ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும்.

சீரகம்!

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சீரகம் நவம்பர் மாத கான்ட்ராக்ட் கடந்த வாரம் அதிகபட்சமாக 17,000 என்ற விலையிலும், குறைந்தபட்சமாக 17,200 என்ற விலையிலும் வர்த்தகமானது.

உள்ளூர் சந்தைகளில் தேவைக் குறைவு காரணமாக இதன் விலை சற்று குறைவாக வர்த்தகமானது. ஆனால், சீரகத்தின் தேவை படிப்படியாக அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் இதன் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 டெக்னிக்கல் சார்ட்படி, சீரகத்தின் விலை 16,555-க்கு  கீழே  செல்லாதபட்சத்தில் இதன் விலை நீண்ட கால அடிப்படையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்