கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

ந்த வாரம் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

தங்கம்!

“சென்ற வாரத்தில் தங்கம் மிகப் பெரிய ஏற்றத்தை கண்டது. கடந்த திங்கள் அன்று (31.10.16) எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கம், நவம்பர் கான்ட்ராக்ட்டானது 30,155 ரூபாய் என்ற விலையில் வியாபாரம் ஆக ஆரம்பித்து, பின் வலிமையாக ஏறி, உடனடித் தடை நிலையான 30,200-ஐ உடைத்தபின், புதன் அன்று (02.11.16) 30,804 என்ற உச்சத்தைத் தொட்டது. அதே காலகட்டத்தில், உலக பங்குச் சந்தைகளும், உள்நாட்டு பங்குச் சந்தையும் இறக்கத்தில் இருந்தன.

தங்கமானது அக்டோபர், 2016 முழுவதும் ஒரு பக்கவாட்டு நகர்விலேயே இருந்தது. அதாவது, ஆதரவாக 29400-யும், தடை நிலையாக 30100-யும் கொண்டு இருந்தது. ஆனால் கடைசி வாரத்தில் மிக பெரிய அளவில் 30100 என்ற தடையை உடைத்து வலிமையாக ஏறியுள்ளது. பொதுவாக, உலகின் அரசியல் பொருளாதார சூழலில் நிச்சயமற்றதன்மை இருக்கும்போது, நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பும். அந்த வகையில், தங்கத்தின் தேவை திடீரென்று உயர்ந்துள்ளது. அடுத்து வரக்கூடிய அமெரிக்க தேர்தலும், அமெரிக்காவின் ஃபெட் ரிசர்வ் வட்டி விகிதம் உயர வாய்ப்பிருப்பதும் முக்கிய காரணங்கள். 

தங்கம் தற்போது 30,900 என்ற அடுத்த தடைநிலையை கொண்டுள்ளது.  தற்போதைய உடனடி ஆதரவு நிலை 30,350 ஆகும். இந்தத் தடை உடைக்கப் படாதவரை, தங்கம் ஏற்றத்திலோ அல்லது பக்கவாட்டு நகர்விலோ இருக்கலாம்.

கச்சா எண்ணெய்!

சென்ற வாரம் முழுவதும் கச்சா எண்ணெய் பெரிய இறக்கத்தில் இருந்தது. கச்சா எண்ணெய் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து கடைசி வாரம் வரை எம்சிஎக்ஸ் சந்தையில் ஒரு பேரல் நவம்பர் குரூட் ஆயில் 3,300-3,500 ரூபாய்க்கும் இடையே சுற்றி வந்தது. அக்டோபர் 28-ம் தேதி முக்கிய ஆதரவான 3,300-ஐ உடைத்து இறங்கியது.

அன்றிலிருந்து தொடர்ந்து இறங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த இறக்கமானது தொடர்ந்து தற்போது ரூ.2,900 என்ற ஆதரவை எடுக்க முயற்சிக்கிறது. இந்த ஆதரவு தக்க வைக்கப்பட்டால், ஒரு ‘புல்பேக் ரேலி’ வரலாம். இந்த ரேலியானது  முதல்கட்டமாக 3,075 என்பதையும் அடுத்து 3,150 என்ற இலக்கையும் நோக்கி நகரலாம். ஆதரவு நிலை என்பது 2,900 - 2,850-ஆக உள்ளது. இந்த ஆதரவு உடைக்கப்படுவது கடினம். இந்த எல்லைகளில் வாங்குவது சிறப்பு’’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்