பிஎஃப் மூலம் கிடைத்த பணம்... எதில் முதலீடு செய்யலாம்?

கேள்வி- பதில்

?என் பிஎஃப் கணக்கில் ரூ.4.5 லட்சம் வரை உள்ளது. இந்தப் பணத்தை 15 ஆண்டுகளுக்கு என் ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்யலாம் என யோசித்து வருகிறேன். இதற்கான சிறந்த முதலீட்டு வழிகளைப் பரிந்துரைக்கவும்!

- சுந்தர், புதுக்கோட்டை

ச.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

“ரூ.4.5 லட்சம் பிஎஃப் பணத்தை ஓய்வுக் காலத் தேவைக்காக 15 வருட காலம் ஒதுக்குவது வரவேற்கத்தக்கது. ஈக்விட்டி ஃபண்டுகள், குறிப்பாக, ஸ்மால், ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டுகளில் (ரிலையன்ஸ் ஸ்மால் கேப், சுந்தரம் செலக்ட் மிட்கேப், மிரே அஸெட் புளூசிப்) ரூ.1.5 லட்சம் வீதம் மூன்று ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். சராசரியாக ஆண்டுக்கு 15% வருமானம் கிடைத்தால், 15 வருடங்களில் ரூ.36.60 லட்சம் கிடைக்க வாய்ப்புண்டு.

பிறகு, அந்தப் பணத்தை பேலன்ஸ்டு ஃபண்டுகளில் (ஓய்வு நிதி பெற நினைக்கும்போது சிறப்பாகச் செயல்படும்) முதலீடு செய்து சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் ப்ளான் (SWP) மூலம் உங்களுக்கு அப்போதைய தேவைக்கேற்ப முடிவு செய்து மாதத் தொகையாகப் பெறலாம்.”

?என் மகன் மற்றும் மருமகள் சமீபத்தில் இந்தியாவில் இருந்து நிரந்தரமாக அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்தியாவில் அவர்களுக்கு சில முதலீடுகள் இருக்கின்றன. அந்த முதலீடுகளுக்கு எப்படி வரி செலுத்த வேண்டும்?


- குருநாதன், நெல்லை

ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோவை

“இந்தியாவில் 182 நாட்களுக்குக் குறைவாக உங்கள் மகனும் மருமகளும் வசித்திருக்கும் சூழ்நிலையில் அவர்கள் இந்தியாவில் சம்பாதித்திருக்கும் வருமானத்துக்கு இங்கு வருமான வரி கட்டவேண்டும்.

உதாரணமாக, அவர்களது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி, வாடகை போன்ற வருமானங்களுக்கு இந்தியாவில் வரி கட்டவேண்டும். அமெரிக்காவில் சம்பாதிக்கும் வருமானத்துக்கு அங்கே வரி கட்டவேண்டும். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தமும் உள்ளது.”

?ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகளை மேற்கொள்ள எஸ்ஐபி முதலீடு சிறந்த முறையாக இருக்குமா? நான் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.10 லட்சம் வரை முதலீடுகளை மேற்கொள்ள விரும்புகிறேன். ஆனால், இதை எவ்வாறு லாபம் தரத்தக்க வகையில் சிறப்பாகச் செய்வது எனத் தெரியவில்லை. விளக்கமாகக் கூறினால் நன்றாக இருக்கும்.

-பிரதீப், திருச்சி

பாரதிதாசன், நிதி ஆலோசகர்

“செல்வத்தைச் சேர்க்க மிக எளிய மற்றும் பாதுகாப்பான வழி எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வதுதான். உங்கள் இலக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை இருப்பின், பேலன்ஸ்டு ஃபண்டுகளைத் தேர்ந்தெடுங்கள்.
உங்களுடைய இலக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தால், டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்