மக்கள் விரும்பும் திருவண்ணாமலை!

ரியல் எஸ்டேட் ரவுண்ட் அப்

சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. அண்ணாமலையாரின் தீப தரிசனத்தைக் காண்பதே கோடி புண்ணியம் என்பார்கள். அதனாலேயே  ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் தீப தரிசனத்துக்கு வந்து குவிகிறார்கள். மாதம்தோறும் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையைத் தேடி வருகின்றனர் பக்தர்கள். பெளர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் வெளிநாட்டினரும் கிரிவலம் செல்கின்றனர்.

திருவண்ணாமலை, நகரின் நடுவில் அண்ணாமலையார் ஆலயம் இருப்பதால், வருடத்தில் பாதி நாட்கள் விழாக்கோலமாகவே இருக்கும். அமைதிக்கு முத்திரையாக ரமணர் ஆஸ்ரமம் உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன.

அதுமட்டுமன்றி, இங்கேயே மனைகள் வாங்கி வீடு கட்டி குடியேறவும் செய்கின்றனர். வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் பலரும் ஓய்வுக்காக அமைதியான இடங்களைத் தேடும் போது, அவர்களின் முக்கியத் தேர்வாக திருவண்ணாமலை  இடம்பெறுகிறது.
திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் நிலவரம் குறித்து மூகாம்பிகை ரியல் எஸ்டேட் மனோகருடன் பேசினோம்.             

‘‘திருவண்ணாமலையில் தொடர்ந்து சில  ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் பிசினஸ் முடங்கியுள்ளது. மனைகளின் அரசு மதிப்பீடு மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால், மனையின் மதிப்பு எந்தளவுக்கு விற்பனையாகிறதோ, அதே அளவுக்கு பத்திரப் பதிவுக்கும் செலவாகிறது. அதுபோக, ‘பவர்’ பத்திர செலவும் ரூ.10,000 வரை ஏற்கெனவே உயர்ந்துவிட்டது. இதனால், சுமாராகத்தான் மனைகள் விற்பனையா கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்