தொழில் துறையில் பின்தங்கும் தமிழகம்! - ஏன் இந்த நிலை...

எம்.குமரேசன்

தொழில் துறை வளர்ச்சியில் சென்னையைத் தவிர்த்துவிட்டு, தென் இந்தியாவை ஒரு காலத்தில் யோசித்துப் பார்த்துவிட முடியாது. ஒரு நிறுவனம் தனது தலைமையகத்தை மும்பையில் அமைத்தால், சென்னையில்தான் தனது அடுத்த கிளையைத் தொடங்கும். இந்தப் பெருமையை சென்னையிடம் இருந்து ஹைதராபாத்தும் பெங்களூருவும் சில ஆண்டுகளுக்கு முன்பே தட்டிப் பறித்தன. ஆனால், தற்போது வெளியானத் தகவல் கடும் அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது.

ஆசியாவின் டெட்ராயிட் என்று அழைக்கப்படும் சென்னை நகரம், தொழில் தொடங்க ஏதுவான நகரங்களின் என்ற பட்டியலில் அகில இந்திய அளவில் பதினைந்தாவது இடத்தை பெற்றிருப்ப தாக, தொழில் தொடங்குவதற்கு ஏதுவான சூழல் குறித்த உலக வங்கியின் ஆய்வு முடிவு சொல்லி இருக்கிறது.

பஞ்சாப்பின் லூதியானாதான் தொழில் தொடங்க ஏதுவான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. மொத்தம் 17 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவில் சென்னைக்கு பிறகு கொச்சியும், கொல்கத்தாவும் கடைசி இரு இடங்களில் வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்