ஷேர்லக்: சந்தை இறங்கினால், முதலீடு செய்ய வாய்ப்பு!

புதன், வியாழக்கிழமை மாலை வேளைகளில் பெய்த மழை, வெள்ளி அன்றும் தொடரலாம் என்று ஷேர்லக் நினைத்தாரோ என்னவோ, சரியாக 4.30 மணிக்கே நம் கேபினுள் நுழைந்தார். சீக்கிரமே வந்து சேர்ந்த அவரை கேண்டீனுக்கு அழைத்துச் சென்று பேசத் தொடங்கினோம்.

‘‘இந்த வாரம் முழுக்கவே சந்தை இறங்கு முகத்தில் இருக்கிறது. நிஃப்டி 50 கரடியின் பக்கம் சாய்ந்துவிட்டது போலத் தெரிகிறது. சந்தை இன்னும் இறங்குமா அல்லது அடுத்துவரும் வாரங்களிலாவது ஏறுமா’’ என கொஞ்சம் கவலையுடன் கேட்டோம்.
‘‘நிஃப்டி 50-ஆனது தனது 8600 மற்றும் 8550 ஆகிய இரண்டு சப்போர்ட் லெவல்களையும் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் பியரிஷ் கேன்டில் பேட்டர்ன் உருவாகி உள்ளது. மேலும், பங்குகளை விற்று வெளியேறுவதால் அழுத்தம் ஏற்பட்டு, சந்தை இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் 200 புள்ளிகள் குறைந்து வர்த்தகமாகி உள்ளது.

இப்போது அடுத்த சப்போர்ட்டான 8500 நிலையையும் உடைத்து கீழே போயிருக்கிறது. இதனால் புதிய இறக்கம் வர வாய்ப்புள்ளது. இந்த இறக்க நிலையில், வர்த்தகர்களை லாங் போக வேண்டாம் என்று அனலிஸ்ட்டுகள் அறிவுறுத்துகிறார்கள். அமெரிக்க தேர்தல் முடிந்து ரிசல்ட்டுகள் வெளியாகிற வரை, குறுகிய காலத்துக்கு சந்தையில் ஏற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்றும், அப்படியே சிறு ஏற்றம் வந்தாலும் தற்போதைய சூழலில் நிஃப்டி 8600-ஐ தாண்டிச் செல்வது கடினம் என்றும் சொல்கிறார்கள். ஏனெனில் இந்தியா விஐஎக்ஸ் நான்கு வர்த்தக தினங்களில் 6.72% உயர்ந்திருக்கிறது. இது சந்தையானது கரடியின் பிடியில் வலுவாக இருப்பதையே காட்டுகிறது என்கிறார்கள்.

ஆனால், சந்தை தற்போதுள்ள நிலையில், நிஃப்டி 8200 புள்ளிகளுக்குக் கீழ் குறைய வாய்ப்பில்லை. அதன்பிறகு சந்தை உயரவே செய்யும். எனவே, இப்போது நன்கு விலை குறைந்துள்ள நல்ல பங்குகளை வாங்கினால், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த பொன்னான வாய்ப்பினைத் தவறவிட வேண்டாம்’’ என்று வேண்டுகோள் விடுத்தவருக்கு ஃபில்டர் காபி வந்து சேர்ந்தது. அதைக் குடித்தவர் மேற்கொண்டு நம் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.

‘‘டிசிஎஸ், ஓன்ஜிசி உள்ளிட்ட 136 பங்குகள் சரிவில் இருக்கிறதே’’ என்றோம் மீண்டும் கவலையுடன்.

‘‘பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான பங்குகள் இறக்கத்தில் உள்ளன. இவற்றில் முதலீட்டாளர்களின் டாப் லிஸ்ட்டில் இருக்கும் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், எல் அண்ட் டி, சன் பார்மா, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகளும், ஐடிபிஐ, எஸ்பிபிஜெ, பேங்க் ஆஃப் இந்தியா, டிசிபி பேங்க், ஆந்திரா பேங்க் உள்ளிட்ட வங்கிகளும், சில என்பிஎஃப்சி-களும் அடக்கம். இந்தப் பங்குகளின் விலை மேலும் இறங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அனலிஸ்ட்டுகள் சொல்கிறார்கள். ஏனெனில் இவற்றின் எம்ஏசிடி (Moving Average Convergence Divergence) சிக்னல் லைனுக்கும் கீழே போவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. உதாரணத்துக்கு, டிசிஎஸ் புதன்கிழமை அன்று அதன் எம்ஏசிடி சிக்னல் லைனையும் தாண்டி -16.31-ல் வர்த்தகமானது. இது போன்ற சமயங்களில் பங்குகளை விற்பதும், வைத்திருப்பதும் முதலீட்டாளர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தது. ரிஸ்க் எடுக்கத் தயார் என்பவர்கள் இந்தப் பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கலாம்’’ என்று விளக்கம் தந்தார்.

‘‘இந்தியப் பங்குச் சந்தைகளில் எஃப்ஐஐ முதலீடுகளும் குறைந்து வருகிறதே?’’ என்றோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்