முன்னேற்றம் தரும் மாற்றங்களை வரவேற்போம்!

ஹலோ வாசகர்களே..!

னிவரும் ஆண்டுகளில் பொது பட்ஜெட்டையும் ரயில்வே பட்ஜெட்டையும் ஒன்றாகத் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. மேலும், பிப்ரவரி மாதத்தில் கடைசி வேலை நாளன்று பட்ஜெட்டினைத் தாக்கல் செய்வதற்குப் பதிலாக ஜனவரி கடைசியிலேயே தாக்கல் செய்யவும் முடிவெடுத்திருக்கிறது. மத்திய அரசின்  இந்த முடிவுகளைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, தாராளமாக வரவேற்கலாம்.

இப்படிச் செய்வதினால் நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் பலப்பல. தற்போதுள்ள நடைமுறையில் பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகையை அந்தந்த அமைச்சகங்களுடன் பேசி பணத்தைப் பட்டுவாடா செய்து செலவழிப்பதற்குள் அக்டோபர் மாதமாகிவிடுகிறது. இதற்குள் மழைக் காலம் ஏறக்குறைய முடியும் நிலைக்கு வந்துவிடுகிறது. புதிய நடைமுறை களின்படி, மழைக் காலம் தொடங்கும் ஜூன் மாதத்துக்கு முன்பே அமைச்சகங்களுக்குத் தேவையான நிதியைத் தந்துவிட முடியும். இதனால் வளர்ச்சிக்கான பணிகளை உடனடியாகத் தொடங்க முடியும். இப்போதுள்ள நடைமுறையில், பாலம் கட்ட ஒதுக்கிய  பணம் வெள்ள நிவாரணத்துக்கும், பாசன வசதிக்காக ஒதுக்கிய பணம் வறட்சி நிவாரணத்துக்கும் செலவாகிறது. உள்கட்டமைப்புக்கு அதிகம் செலவழிக்க இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் நிச்சயம் பயன் தரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்