டைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாமா?

கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர், Ciicindia.com

ங்குச் சந்தை உச்சத்தைத் தொட்டுவிட்டு, எப்போது வேண்டுமானாலும் இறங்கலாம் என்கிற நிலையில்தான் இருக்கிறது. சந்தை உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் முதலீடு செய்வது சரியாக இருக்குமா என்று நினைத்து, பலரும் கொஞ்சம் ஒதுங்கியே நிற்கிறார்கள். சந்தையின் பிஇ ரேஷியோ அதிக அளவில் இருக்கும் இந்த சமயத்தில், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதைவிட, டைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்வதே சரி.  அது என்ன டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் என்று கேட்கிறீர்களா?

டைனமிக் ஃபண்ட் என்பது!

டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் என்பது ஒரு வகை பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். அதாவது, மார்க்கெட் ஏற்ற இறக்கத்துக்கேற்ப, பங்கு (ஈக்விட்டி) முதலீட்டைக் கூட்டுவது அல்லது குறைப்பது இந்த ஃபண்டில் நடக்கும். ஈக்விட்டி மார்க்கெட்டின் வேல்யூவேஷன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விகிதப்படி, பங்கு மற்றும் கடன் திட்டங்களில் முதலீடு செய்வதுதான் இந்தத் திட்டம்.

இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். பொதுவாக, ஈக்விட்டி பிஇ (ப்ரைஸ் ஏர்னிங்) ரேஷியோவை வைத்துத்தான் வேல்யூவேஷனைக் கணக்கிடுவார்கள். இப்போது, நிஃப்டி பிஇ ரேஷியோ 23-ஆக இருக்கிறது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். (கடந்த கால பிஇ ரேஞ்ச் 10 முதல் 28 வரை இருந்தது.  நிஃப்டி சராசரி பிஇ ரேஷியோ = 18).

பங்குச் சந்தையின் பிஇ இப்படி அதிகமாக இருக்கும்போது ஃபண்ட் மேனேஜர்கள் அதில் மட்டுமே அதிக அளவில் முதலீடு செய்வதைக் குறைத்துக்கொண்டு, கடன் சந்தையி லும் முதலீடு செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் ஏற்படும் இழப்பு தவிர்க்கப்படுகிறது.  கடன் சந்தையின் மூலம் கிடைக்கும் குறைந்தபட்ச வருமானம் உறுதியாகிறது.

பங்குச் சந்தையின் வேல்யூவேஷன் நன்கு குறைந்தபின்பு, கடன் சந்தையில் இருக்கும் பணத்தை எடுத்து மீண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள் ஃபண்ட் மேனேஜர்கள். இதன்மூலம் நஷ்டத்தைத் தவிர்த்து, கொஞ்சம் கூடுதலான லாபத்தைப் பார்க்க வழி உண்டு.

லாபம் எப்படி?

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வேல்யூவேஷன் அதிகமாக இருக்கும் சமயத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதினால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க முடிகிறது. என்றாலும், இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபமானது ஈக்விட்டி ஃபண்டு களுடன் ஒப்பிடும்போது நீண்ட காலத்தில் குறைவாக இருக்கிறது. இது நீண்ட காலத்துக்கு ஏற்ற திட்டமல்ல. பங்குச் சந்தையின் வேல்யூவேஷன் அதிகமாக இருக்கிற காலத்தில் மட்டுமே இந்த ஃபண்டினை நாடவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்