சேலத்தில் மியூச்சுவல் ஃபண்ட்... நம்பிக்கை பெற்ற முதலீட்டாளர்கள்!

மு.சா.கெளதமன்

டந்த வாரம் செப்டம்பர் 18-ம் தேதி, சேலத்தில் நாணயம் விகடன் ‘மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்’ என்கிற தலைப்பில் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்தியது. பல மாவட்டங்களில் இருந்தும் முதலீட்டாள்ர்கள் ஆர்வத்துடன் கலந்து, கொண்டனர். ‘ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தின் இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பன் பயிற்சி அளித்தார்.

முதலில் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன, அவைகளின் வகைகள், மியூச்சுவல் ஃபண்டினால் கிடைக்கும் நன்மைகள், வரிச் சலுகைகள் பற்றி விளக்கமளித்தார். மியூச்சுவல் ஃபண்டில் தைரியமாக முதலீடு செய்யலாம் என்பதற்கு எந்தமாதிரியான நெறிமுறைகள் இருக்கின்றன என்பதை எடுத்துச் சொன்னார். நல்ல லாபம் தரக்கூடிய   ஃபண்டுகளை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்  என்பதையும் விளக்கினார்.

ஒரு ஃபண்டில் நாம் முதலீடு செய்த பிறகு,  அது நன்றாகத்தான் செயல்படுகிறதா என்பதையும் நாம் தான் கண்காணிக்க வேண்டும். அவைகளை எப்படி கண்காணிக்க வேண்டும் என்பதையும் விளக்கினார். நாம் மியூச்சுவல் ஃபண்டில் போர்ட்ஃபோலியோவை எப்படி உருவாக்க வேண்டும், நம் போர்ட்ஃபோலியோவில் எந்த அளவு ஈக்விட்டி, கடன், பேலன்ஸ்டு என்று ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்பது போன்றவற்றை விரிவாக விளக்கினார். நல்ல போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதே நம்பகமான வருமானத்தைக் கொடுக்கும் என்று முடித்தார் சொக்கலிங்கம் பழனியப்பன்.

பயிற்சி வகுப்பின்போதே வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு உதாரணங்களோடு விளக்கமளித்தார் அவர். நிகழ்ச்சி நிறைவடையும் தருணத்தில் முதலீட்டாளர்கள், ‘உண்மையாகவே மியூச்சுவல் ஃபண்ட் ஒரு அற்புதமான முதலீடுதான்’ என நம்பிக்கையோடு சொன்னார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்