டல்லடிக்கும் தூத்துக்குடி!

ரியல் எஸ்டேட் ரவுண்ட் அப்எஸ்.சரவணப்பெருமாள்

ந்திய வரைபடத்தில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் நகரம் தூத்துக்குடி.  திருமந்திரநகர் என ஆன்மிக பெயரையும் தாமிரபரணி ஆற்றின் ஊற்று நீரை குறிக்கும் வகையில் ஊற்றுக்குடி எனவும் பெயர் பெற்ற இந்த ஊர், ஊத்துக்குடி என மறுவி இப்போது தூத்துக்குடி எனச் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே மீன்பிடித் தொழில், உப்பு உற்பத்தி, விவசாயம் என பல துறையிலும் சிறந்து விளங்கிவரும் இந்த ஊருக்கு மேலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவது துறைமுகம்தான். 

தெற்கே திருச்செந்தூர், மேற்கே திருநெல்வேலி, வடக்கே மதுரை, கிழக்கே துறைமுகம் என எல்லை கொண்ட இந்த ஊரை இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் தொட்டுச் செல்கின்றன. ஒரு காலத்தில் சும்மா கிடந்த மானாவாரி நிலங்கள்கூட இப்போது ஏற்றுமதி, இறக்குமதி தொழிலுக்கான பொருட்களை இறக்கி வைக்கும் சேமிப்புக் கிடங்குகளாக விளங்கி வருகிறது. 

வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய வசதி இருப்பதால், பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் தூத்துக்குடி அருகே உள்ள மானாவாரி நிலங்களில் ஜோராக தொழில் நடத்தி வருகின்றன.

நகரின் அருகிலேயே சிப்காட் தொழிற்பேட்டை இருக்கிறது. அங்கு சிறியது முதல் பெரியது வரையிலான தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவற்றை நம்பி ஏராளமானோர் பிழைப்பு நடத்துகிறார்கள். உள்ளூர் மட்டுமல்லாது வெளி மாவட்டம், வெளி மாநில மக்களின் வேலைவாய்ப்புச் சந்தையாக தூத்துக்குடி விளங்கி வருகிறது. இதனால் வெளியிடங்களிலிருந்து வரும் மக்கள் தூத்துக்குடியில் வசிக்கும் நிலை இருக்கிறது. தூத்துக்குடியில் வாடகைக்குகூட வீடு கிடைக்காத நிலை இருந்துவந்தது. ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஓஹோவென நடந்துவந்த ரியல் எஸ்டேட் வியாபாரம், தற்போது மந்த நிலையில்தான் இருக்கிறது.  

ரியல் எஸ்டேட் உரிமையாளர் முரளிதரன், ‘‘கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சேது சமுத்திர திட்டம் வருவதான நடவடிக்கைகள் வேகமாக நடந்தபோது, வெளியூர்காரர்கள் தூத்துக்குடியில் நிலம் வாங்குவதில் ரொம்பவும் ஆர்வம் காட்டினார்கள். அதனால் ரியல் எஸ்டேட் தொழில் சூப்பராக இருந்தது. இப்போது அந்த திட்ட எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. போதாதக் குறைக்கு தமிழக அரசு பத்திரச் செலவை அதிகமாக்கிவிட்டது. அது போல் ரூ.50 லட்சம் வரையில் ஏதாவது நிலம் பத்திரப்பதிவு நடந்தால் பத்திர அலுவலகத்திலிருந்தே வருமான வரி அலுவலகத்துக்கு தகவல் சென்றுவிடுகிறது. இதனால் அதிக விலை மதிப்புள்ள நிலத்தை வாங்க பலரும் பயப்படுகிறார்கள். இருந்தாலும் மீடியமான விலை உள்ள மனைகள், வீடு கட்டுவதற்கான மனைகள் மட்டும் விற்கவும் வாங்கவும் செய்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்