பத்திரப் பதிவுத் துறையின் தடுமாற்றம்... முடங்கிய தமிழக ரியல் எஸ்டேட்!

பி.ஆண்டனிராஜ்

மிழகம் முழுவதுமே ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்திருக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அந்தத் துறையை முடங்கச் செய்திருக்கிறது. பத்திரங்கள் எதுவும் பதிவு செய்யப்படாததால், பத்திரப் பதிவு அலுவலகங்களும் ஆள் அரவமின்றி கிடக்கின்றன. என்ன பிரச்னை என்று களமிறங்கி விசாரித்தோம்.
   
கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் விளைநிலங்களை மனைகளாக மாற்ற மிகக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. ஆனால், தமிழகத்தில் விளைநிலங்களை பிளாட் போடுவதற்கு அத்தகைய கடுமையான நடைமுறைகள் எதுவும் கிடையாது. இதனால் விளைநிலங்கள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாகவும் வானுயர்ந்த அபார்ட்மென்டுகளாகவும் மாறி வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி முக்கியமான தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ‘விளைநிலங்கள் வீட்டு மனைகளாக விற்பனை செய்யப்படக் கூடாது. இதனைப் பத்திரப்பதிவு அலுவலகங்கள் பதிவு செய்யக் கூடாது. டி.டி.சி.பி எனப்படும் நகரமைப்பு இயக்குநரகத்தில் அனுமதி பெற்ற மனைகளை மட்டுமே பதிவு செய்யவேண்டும்’ என உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, ரியல் எஸ்டேட்டை நிலைகுலையச் செய்திருக்கிறது.

இதுவரையிலும், பஞ்சாயத்து அனுமதியுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த மனைகளைக்கூட பதிவு செய்ய பத்திரப்பதிவுத் துறை அனுமதிக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்