கன்ஸ்யூமர் லோன்... உங்களுக்கு கிடைக்குமா?

சோ.கார்த்திகேயன் கன்ஸ்யூமர் ஸ்பெஷல்

ண்டிகை  என்றாலே ஷாப்பிங் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். அடுத்து ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து வர உள்ளன. இந்த பண்டிகை சமயங்களில் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி என ஏதாவது பொருட்களை நாம் வாங்குவோம். நம்மில் பலரால் இந்த பொருட்களை முழுத் தொகை கட்டி வாங்க முடிவதில்லை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடனை வாங்கியே பல விதமான பொருட்களை வாங்குவது மிடில் கிளாஸ்வாசிகளான நமக்கு பழக்கமான விஷயமாகிவிட்டது. இது நுகர்வோர் கடன் (Consumer loan) எனப்படுகிறது.

இந்த கடன் எப்படி வழங்கப்படுகின்றன, இதற்கு என்ன ஆவணங்கள் தேவை, இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விசாரிக்க களமிறங்கினோம். ஷாப்பிங் மால்கள் மற்றும் பெரிய கடைகளில் இருக்கும் கன்ஸ்யூமர் லோன் வழங்கும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம்.

ஆவணங்கள்!

நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பவர்கள் தங்களுடைய முகவரிச் சான்று, அடையாளச் சான்று, கடைசி 3 மாத வங்கி அறிக்கை, காசோலை ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.   நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பம் செய்பவரின் முகவரி எல்லா ஆவணங்களிலும் ஒன்றாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றில் முகவரி மாறி இருந்தால் கடன் மறுக்கப்படலாம்.

கடன் வாங்கப் போகிறவர், எந்த வீட்டில் குடி இருக்கிறாரோ, அந்த வீட்டின் முகவரியைத்தான் முகவரிச் சான்றாக தரவேண்டும். ஒரு மாதத்துக்குமுன் வேறு ஒரு இடத்தில் வசித்துவிட்டு, கடன் வாங்கும்போது பழைய வீட்டின் முகவரியைத் தரக்கூடாது. கடைசியாக எந்த வீட்டில் வசிக்கிறாரோ, அந்த வீட்டின் முகவரியையே முகவரிச் சான்றாக வழங்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்