KVB @ 100 - தலைமுறைகளைத் தாண்டிய வரலாறு!

சி.ய.ஆனந்தகுமார்

நூறு ஆண்டுகளுக்கு ஒரு நிறுவனம் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுவது ஆச்சர்யம் தரும் விஷயம். பல் தலைமுறைகளை கடந்து நாணயம்மிக்க பணியை மேற்கொண்டு வருகிறது கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கரூர் வைஸ்யா வங்கி. கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. இந்த நூறு ஆண்டு காலத்தில் இந்த வங்கி கடந்து வந்த பாதை பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் கொண்டது. அதில் சில துளிகள் இதோ:

*1916-ம் ஆண்டு. முதலாம் உலகப்போர் சமயத்தில் கரூரைச் சுற்றி இருந்த விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் நிதித் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்தனர். அவர்களுக்குக் கடன் தந்து உதவ யாருமே இல்லை. இந்தப் பிரச்னையை மையமாக வைத்து அவர்களுக்கு நிதி உதவி செய்யவேண்டும் என்கிற அடிப்படையில் வெங்கடராம செட்டியார், ஆதிகிருஷ்ண செட்டியார், பத்து இயக்குநர்கள் உள்ளிட்டோருடன் 1.2 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கரூர் வைஸ்யா பேங்க் (சுருக்கமாக கேவிபி) இப்போது வளர்ந்து ஆலமரமாக நிற்கிறது.
 
*கேவிபியின் முதல் முதல் கிளை கரூரில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் மக்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில், தங்கள் அடுத்த கிளையை திண்டுக்கல்லில் 1927-ம் ஆண்டு துவங்கியது. அடுத்து தாராபுரம், குளித்தலை, ஈரோடு என வரிசையாகக் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன.
 
*இந்த வங்கியில் எம்.ஏ.வெங்கடராம செட்டியார் 18 ஆண்டுகளும், ஆதிகிருஷ்ண செட்டியார் 30 வருடங்களும் வளர்ச்சிக்காக பாடுபட்டனர். இவர்களைத் தொடர்ந்து இவர்களின் மகன்களும், பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் இந்த வங்கியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். ஆரம்பத்தில் சில நபர்கள் ஊழியராக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கியில் இப்போது 7,200 ஊழியர்கள் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்