பிஏசிஎல் சொத்துகள் ஏலம்... முதலீட்டாளர்களின் பணம் திரும்பக் கிடைக்குமா?

ஜெ.சரவணன்

பிஏசிஎல் நிறுவனத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. குறைந்த விலையில் நிலம் வாங்கித் தருவதாகவும் அதிக லாபம் தருவதாகவும் ஆசைக் காட்டி, அப்பாவி மக்களிடம் இந்த நிறுவனம் மொத்தமாக கொள்ளை அடித்த பணம் ரூ.49,100 கோடி. இந்த நிறுவனத்தின் மோசடித் திட்டத்தைத் அறிந்த பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி, உடனடியாக  இதன் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தியது.

பிஏசிஎல் குழுமம் சார்ந்த நிறுவனங்கள் கிட்டதட்ட 640 நிறுவனங்கள் உள்ளன. தற்போது அந்த நிறுவனங்கள் சார்ந்த அனைத்து டீமேட் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்க செபி உத்தர விட்டுள்ளது. மேலும், கடந்த ஒரு வருடத்துக்கான பரிவர்த்தனை விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் அவற்றின் அனைத்துவிதமான சொத்துக்களும் முடக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்த நிறுவனத்தின் இயக்குநர்களைக் கைது செய்ததுடன், ரூ.7,269 கோடி அபராதமும் விதித்தது செபி. ஆனால், இந்த நிறுவனம் அபராதத்தையும் கட்டவில்லை; மக்களிடம் வாங்கிய பணத்தையும் தரவில்லை.பணம் கட்டி ஏமார்ந்தவர்கள் எப்போது தங்களுடைய பணம் திருப்பி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், பிஏசிஎல் நிறுவனம் இந்தியா முழுக்க வாங்கிக் குவித்த நிலங்களையும், சொகுசு கார்களையும் ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஏமார்ந்த முதலீட்டாளர் களுக்குத் தர செபி ஏற்பாடு செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிஏசிஎல் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு கார்கள் ஏலத்தில் விற்கப் பட்டன. தற்போது பிஏசிஎல் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள் ஏலத்தில் விற்கப்பட இருக்கின்றன. இதற்காகவே ஓர் இணையதளத்தைத் (auctionpacl.com) துவக்கியது செபி. இந்த இணைய தளத்தின் மூலம் பிஏசிஎல் நிறுவனம் வாங்கிய நிலங்களை ஏலத்தில் வாங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கூடிய சீக்கிரத்தில் இந்த நிலங்கள் விற்கப்படுவதற்கு வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

ஒரு மோசடி நிறுவனத்தின் சொத்துகளை, பல சவால்களைக் கடந்து ஏலம் விடுவது இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே இதுதான் முதன்முறை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். பிஏசிஎல் நிறுவனம் இந்தியா முழுக்க 23 மாநிலங்களில் 26,500 சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பது மேற்சொன்ன இந்த இணைய தளத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டுமே 8,193 சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பது ஆச்சர்யப்பட வைக்கும் தகவல். (பார்க்க அட்டவணை)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்