பண விளையாட்டு! - வியாபாரச் சிறுகதை!

பார்த்தசாரதி ரெங்கராஜ்

வியர்வை படிந்த சட்டையிலிருந்து துர்நாற்றம் வருகிறதா என்று சோதிக்கும் முயற்சியில் இருந்தபோது, அந்த ஏசி  அறையை படாரென திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் ராம்மோகன். அவர் முகத்தில் அவசரமும், ஆச்சர்யமும் கலந்து தெரிந்தது.

“என்ன குரு, இவ்வளவு அவசரமா வரச் சொல்லியிருக்கீங்க, ஏதாச்சும் பிரச்னையா?” என்று கேட்டுக்கொண்டே அமர்ந்தார் ராம்மோகன். நான் பதில் சொல்லும் முன்பே, கண்களை மூடிக்கொண்டார். கைகள் அவர் மேஜையில் வைத்திருந்த செல்வ கணபதியின் பாதத்தில் இருந்தது. கண் திறக்கட்டும் என்று காத்திருந்தேன்.

இரண்டு நிமிடங்களுக்கு பின், “என்ன குரு,  என்ன பிரச்னை? ஏன் அவசரமா வரச் சொன்னீங்க” என்று சொல்லிக்கொண்டே கண் திறந்தார் .

“போன மாசம், உங்ககிட்ட வேலை செய்ற சீனிவாஸைப் பத்தி பேசினோம் இல்லையா? நான் கூட விசாரிச்சு சொல்றேன்னு சொன்னேனே...!’’ என்று சொல்ல, அவர் கொஞ்சம் சலிப்படைந்தார். 

“ஆமாம் குரு, அதுக்கென்ன, அது சின்ன விஷயமாச்சே, அதுக்காகவா என்னை  அவசரம் அவசரமாக் கூப்பிட்டீங்க?” என்று விசனப்பட்டார்.

‘‘அவனை நீங்க உடனடியா வேலையை விட்டு அனுப்பிடலாம்’’ என்றவுடன் அதிர்ச்சி அடைந்தார் ராம்மோகன்.

‘‘என்னாச்சு குரு, ஏன் அவனை திடீர்னு வேலையை விட்டு அனுப்பச் சொல்றீங்க! நீங்க இந்த மாதிரி எல்லாம் இதுவரைக்கு என்கிட்ட யாரைபற்றியும் சொன்னது கிடையாதே!’’ என்று வாய் குளறினார் ராம்மோகன்.

‘‘ஆமாம். என்னோட அனுபவத்துல, நான் பார்த்த ஒரு பெஸ்ட் சேல்ஸ் பர்சன்னா, அது இந்த சீனிவாஸ்தான்.  ஆனா, அவனை உடனடியா நீங்க வேலையை விட்டுத் தூக்கியாகணும். இல்ல, நீங்க பிரச்னைல மாட்டிடுவீங்க’’ என்றேன். குழப்பத்தில் அவர் முகம் அஷ்ட கோணல் ஆனது. இந்த நேரத்தில்  உங்களுக்கு ஒரு சிறிய ஃப்ளாஷ்பேக் சொல்லிவிடுகிறேன்.

என் பெயர் குரு நாதன். நான் ஒரு எலெக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் ஏரியா மேனேஜர் (முதன்மை விற்பனை அதிகாரி). தயாரித்த பொருட்களை டிஸ்ட்ரிபியூட்டர் (விநியோகஸ்தர்) மூலமாக சிறு சிறு கடைகள், ரீடெய்லர்களுக்கு விற்பது எனது தொழில். எனது விநியோகஸ்தர் ராம்மோகன், இதுபோன்று பல நிறுவனங்களுடன் இணைந்து வேலை செய்பவர். வருட வருவாய் நூறு கோடியைத் தாண்டும்.

சில மாதங்களுக்குமுன் நானும் அவரும் வியாபாரத்தை அதிகரிக்கும் வழிகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். அவரிடம் மொத்தம் ஏழு சேல்ஸ் எக்ஸ்சிக்யூட்டிவ்கள்   வேலை பார்த்து வந்தார்கள். அந்த ஏழு பேருக்கும்  வெவ்வேறு ஏரியாக்கள் தரப்பட்டுள்ளன. அதில் சீனிவாஸ் என்னும் ஒருவரின் விற்பனைத் திறன் மட்டும் என்னை வெகுவாக ஈர்த்தது. ஒவ்வொரு வருடமும் விற்பனையில் 30 சதவிகிதம் வளர்ச்சி தந்துவந்தார். அப்போது அவர் வெளியூர் வட்டத்தில் விற்பனையைப் பார்த்துவந்தார்.

சீனிவாஸை இடமாற்றம் செய்து, இன்னும் பெரிய நகரத்துக்கு அருகில் உள்ள மார்க்கெட் ஏரியாவைக் கொடுத்தோம். பொதுவாக இப்படி செய்யும்போது, சீனிவாஸ் இடத்தில் வேறு யாராக இருந்தாலும் பெருமை அடைந்திருப்பார்கள்.   ஏனென்றால் இது ஒரு வகையான பதவி உயர்வு  தான்.

ஆனால் சீனிவாஸ் இதற்கு மறுப்பு தெரிவித்தான். அவனுடைய பழைய மார்க்கெட்தான் வேண்டும் என்றான். வேண்டுமென்றால் இன்னும் 10 சதவிகிதம் அதிக வளர்ச்சி தருவதாகக் கூறினான்.

மாற்றத்தைக் கண்டு பயப்படுகிறான் என்று நினைத்து, அவனை சமாதானப் படுத்தி வேறு ஒரு மார்க்கெட் ஏரியாவை அவனுக்குத் தந்தோம். 

இரண்டு மாதங்கள் கழித்து பார்க்கையில், அவனது புது ஏரியாவும்  பழைய ஏரியாவும் விற்பனையில் பெரும் சரிவைக் கண்டது. மீண்டும் தனக்கு பழைய மார்க்கெட் தருமாறு அழ ஆரம்பித்துவிட்டான். இவன் செல்லாவிட்டால் விற்பனையே சரிந்துவிடும் அளவுக்கு அப்படி என்ன வாடிக்கையாளர் சேவை செய்திருக்கிறான் என்று தெரிந்தால் அனைவருக்கும் அதைக் கற்பிக்கலாமே என்று கடந்த ஒரு வாரம் அவன் வேலை பார்த்த இடங்கள், கடைகள் என்று சுற்றித் திரிந்தேன். என் ஒரு வார அலசலில் கிடைத்த திடுக்கிடும் பல தகவல்களை வைத்துதான் அவனை உடனடியாக வேலையிலிருந்து நீக்கவேண்டும்” என்றேன்.

“என்ன சொல்றீங்க குரு? அவனை பெஸ்ட்ன்னு சொல்றீங்க, உங்க வாயில பெஸ்ட்ன்னு பேரு வாங்குறது சாதாரண விஷயமில்ல.  அப்படிப் பட்டவனை ஏன் வேலையை விட்டு அனுப்பணும்? ஒண்ணுமே புரியல, கொஞ்சம் தெளிவா சொல்லுங்க என்றார் உச்சகட்டக் குழப்பத்துடன்.
நான் மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தேன். “அவன் டீல் பண்ண கடைக்காரங்க அவன் மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்க. ஒவ்வொரு கடைக்காரங்களுக்கும் என்ன தேவையோ அதை சரியான நேரத்தில செய்றதில் சீனிவாஸ் மாதிரி யாராலையுமே முடியாது. சில பேருக்கு உட்கார்ந்து அவங்க அக்கவுன்ட்ஸ் பார்த்துக் கொடுத்திருக்கான்; சிலருக்கு கல்யாண நாள் பரிசு கொடுத்துருக்கான்; சிலரது பிறந்த நாளை ஞாபகம் வச்சு பொக்கே கொடுத்துருக்கான். அவன் வெறும் சேல்ஸ்மேன் கிடையாது. அவங்களப் பொறுத்தமட்டில் சீனிவாஸ் ஒரு தேவதூதன் மாதிரி’’ என்று நிறுத்தினேன்.

“இதெல்லாம் நல்ல விஷயந்தானே! இதுல  என்ன தப்பிருக்கு குரு?’’ என்றார் அவர் விடாமல்.

“சார், பரிசு கொடுக்க, பொக்கே கொடுக்க நீங்க ஏதாச்சும் எக்ஸ்ட்ரா காசு அவனுக்கு கொடுக்கறீங்களா என்ன?” என்ற என்னை அமைதியாகப் பார்த்தார்.

“நீங்க ஒரு பிசினஸ்மேன். உங்களைப் பொறுத்த வரை தொழில்ல நீங்க எந்த விஷயத்தை  நீங்க மிக முக்கியமா நெனைப்பீங்க ?” என்று ஒரு முடிச்சைப் போட்டேன்.

“என்ன குரு நீங்க, கேள்விக்குப் பதிலா இன்னொரு கேள்வியக் கேட்குறீங்க? ம்... எனக்கு மட்டுமில்ல, எந்தவொரு தொழில் செய்பவருக்கும் மிக முக்கியமான விஷயம், முதல் அல்லது முதலீடு.அதில்லாம தொழிலே கிடையாது” என்றார் ராம்மோகன்.

“சீனிவாஸ்கூட அதைத்தான் செய்திருக்கிறான். அவன் முதலீடே அந்த வெளியூர் மார்க்கெட்தான்” என்றேன் தடாலடியாக.

“புரியல குரு. அவன் என்ன தொழில் பண்றான், மார்க்கெட் எப்படி முதலீடு ஆகும்’’ என்றார் மறுபடியும் தலையில் கைவைத்துக்கொண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்