கேட்ஜெட்ஸ் ஸ்கேன்

ஞா.சுதாகர்

லைகா சோஃபோர்ட் (LEICA SOFORT)

செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவேற்றுவது மகிழ்ச்சிதான் என்றாலும்கூட, நமது புகைப்படங்களை பிரின்ட் போட்டு ரசிக்கும் மகிழ்ச்சிக்கு அது ஈடாகாது. அப்படிப்பட்ட புகைப்படப் பிரியர்களுக்காக வந்தவைதான் இன்ஸ்டன்ட் கேமராக்கள். இந்த கேமராக்களில் போட்டோ எடுத்த அடுத்த சில வினாடிகளில் கையில் போட்டோ கிடைத்துவிடும்.

புஜிஃபிலிம் நிறுவனம் இதற்காக உருவாக்கிய இன்ஸ்டாக்ஸ் மாடல்கள் ஹிட் அடிக்க, அந்த வரிசையில் சோஃபோர்ட் என்ற பெயரில் இன்ஸ்டன்ட் கேமரா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் அழகான வடிவமைப்பு, குறைந்த எடை என பயணம் செய்பவர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது இது. மேக்ரோ, ஆட்டோமேட்டிக், செல்ஃப் டைமர், பார்ட்டி அண்ட் பீப்பிள், ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன், டபுள் எக்ஸ்போஷர், செல்ஃபி என 8 மோட்கள் இதில் இருக்கின்றன. எனவே, செல்ஃபிக்கும் லைகா கேரன்டி தருகிறது.

60 எம்.எம் லென்ஸ், 8 ஷூட்டிங் மோட்ஸ், வெள்ளை, ஆரஞ்சு, மின்ட் என மூன்று நிறங்கள், 740mAh பேட்டரி போன்றவற்றை  கொண்டது இந்த கேமரா. இதில் புகைப்படம் எடுக்க, இன்ஸ்டாக்ஸ் மினி ஃபிலிம் அல்லது லைகா ஃபிலிம் பயன்படுத்தலாம். ஃபுல் சார்ஜ் செய்த பேட்டரி மூலம் 100 படங்களை எடுக்கலாம். வரும் நவம்பர் முதல் சோஃபோர்ட் விற்பனைக்கு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்