கம்பெனி ஸ்கேன்: சர்லா பெர்ஃபாமென்ஸ் ஃபைபர்ஸ் லிமிடெட்!

(NSE SYMBOL: SARLAPOLY)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

‘சர்லா பாலியெஸ்டர் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் 1993-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 1994-ம் ஆண்டு ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றியமைக்கப்பட்டு, 1995-ம் ஆண்டு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் சர்லா பெர்ஃபார்மென்ஸ் ஃபைபர்ஸ் லிமிடெட். பாலியெஸ்டர், நைலான் டெக்சர்டு, ட்விஸ்டட், கவர்டு வகை கெட்டித்தன்மை நூல்கள் மற்றும் தையலுக்கு உபயோகப்படுத்தப்படும் நூல் வகைகளை தயாரிக்கும் நிறுவனம் இது.

சாதாரண வகை நூல்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், படிப்படியாக வளர்ச்சி அடைந்து ,இன்றைக்கு சிறப்பான தனித்தன்மைகளைக் கொண்ட  மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட நூல் வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பே வாடிக்கையாளர் ஒவ்வொருவரின் விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்ப தன்னுடைய தயாரிப்புகளை வடிவமைத்துத் தருவதாகும். 

இந்த நிறுவனம் மூன்று தொழிற்பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இண்டஸ்ட்ரியல் யான்ஸ், நேரோ பேப்ரிக்ஸ், ஹோய்சரி, இன்னர் வியர் மற்றும் ஸ்போர்ட்ஸ் வியர், த்ரெட்கள் போன்றவையே அவை.

இண்டஸ்ட்ரியல் யான்கள் பிரிவில் உற்பத்தி செய்யப்படும் நூல்கள்  ஆட்டோமோட்டிவ்களில் உள் அலங்காரம், ஏர்பேக்குகள்,  சீட் பெல்ட்டுகள், டென்ட்டுகள் மற்றும் பாராசூட்கள் தயாரிப்பு, சாஃப்ட் லக்கேஜ்கள்,  குடைகள், கேன்வாஸ் துணிவகைகள் போன்றவை தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது.

இரண்டாவது தொழில் பிரிவான  நேரோ பேப்ரிக்ஸ், ஹோய்சரி, இன்னர் வியர் மற்றும் ஸ்போர்ட்ஸ் வியர் பிரிவில் உற்பத்தி செய்யப்படும் நூல்கள் மருத்துவத் துறையில் உபயோகிக்கப்படும் பாண்டேஜ்கள், விளையாட்டு மற்றும் நீச்சல் வீரர்களுக்கான உடைகள் தயாரித்தல், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஏனையவர்கள் உபயோகப்படுத்தும் சாக்ஸ்கள், கேஷுவல் ட்ரஸ்கள் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகின்றன.

மூன்றாவது தொழில் பிரிவில், இந்த நிறுவனம் தயாரிக்கும் நூல் வகைகள் (த்ரெட்) டி-ஷர்ட்டுகள், பனியன்கள், பெண்களின் உள்ளாடைகள்,  கம்பளியால் செய்யப்படும் பொருட்கள், படுக்கை விரிப்புகள், நீச்சல் உடைகள், டவல்கள், மேட்கள், எம்ப்ராய்டரிகள், இணைப்பு பஞ்சுறை மெத்தைகள், ஆடைகள், விளையாட்டு வீரர்கள் அணியும் காலணிகள், தோலாடைகள், பர்னிச்சர்கள் மற்றும் கார் சீட்டுகள் போன்றவற்றில் உபயோகிக்கப் படுகின்றன.

உலக அளவில் ஆறு கண்டங்களில் இருக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தன்னுடைய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்துவருகிறது இந்த நிறுவனம். அமெரிக்கா மற்றும் போர்ச்சுகலில் துணை நிறுவனத்தினையும், மத்திய அமெரிக்காவில் இருக்கும் ஹோன்டுராஸிலும், துருக்கியிலும் கூட்டணியில் உருவான உற்பத்தி வசதிகளையும், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் டிஸ்ட்ரிப்யூஷன் வசதிகளையும் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

மும்பையில் தலைமையகத்தினைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், 260 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சில்வாசா மற்றும் வாபி ஆகிய இடங்களில் உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளது. சில்வாசாவில் இருக்கும் இரண்டு உற்பத்தி வசதிகளில் 250 ரகங்களுக்கும் மேலான நூல்களை இந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்ய முடியும்.

நூல்களுக்கான சாயம் பூசுதல் வேலைகளுக்கான தொழிற்சாலையை வாபியில் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.  இந்தத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் சாயப்பட்டறை கழிவு நீரைச் சுத்திகரிப்பதற்கான பொதுவசதிகள், வாபியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

சில்வாசாவுக்கு வெகு அருகில் வாபி இருப்பதாலும் சில்வாசாவில் தொடர்ந்து நல்ல பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் மின்சாரம் கிடைப்பதும் குறிப்பிடத்தக்க அளவில் சிறந்த ஒரு விஷயமாகத் திகழ்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்