உஷார் ஷாப்பிங்!

கன்ஸ்யூமர் ஸ்பெஷல்

குழப்பம் தந்த இழப்பு!

சமீபத்தில் ஃப்ரிட்ஜ் ஒன்று வாங்க கடைக்குச் சென்றோம். போகும் முன்பே என்ன பிராண்ட், என்ன மாடல் என முடிவு செய்துகொண்டுதான் சென்றோம். ஆனால், நாங்கள் சென்ற கடையில் அந்த பிராண்ட் இல்லை. சரி, வேறு கடைக்குப் போகலாம் என கிளம்பவே, அந்தக் கடையின் சேல்ஸ் மேனேஜர் ஓடி வந்தார். “சார், அந்த பிராண்ட் எங்ககிட்டயே இருக்கு; அரைமணி நேரம் காத்திருந்தா எடுத்துவரச் சொல்றேன்” என்றார். கூல் ட்ரிங்ஸ் தந்தார். ‘‘சார், நல்ல பிராண்ட்டைத்தான் செலக்ட் பண்ணிருக்கீங்க... நீங்க தப்பா நினைக்காட்டி ஒரு உண்மையைச் சொல்றேன். அந்த பிராண்ட் நல்லதுன்னாலும் இப்ப மூவிங் இல்ல. அதனாலதான் கொடவுன்ல வச்சிருக்கோம். அதோ பாருங்க, அந்த ப்ளூ கல்ர்ல கோல்டு மெட்டல் பதிச்சிருக்கே அந்த பிராண்ட்தான் இப்ப ஃபாஸ்ட் மூவிங். விலையும் 1,500 குறைவு’’ என்றவர், அதன் சிறப்புகள், டெக்னாலஜி பற்றிச் சொல்லவே... அதைவிட இது பெஸ்ட் போல என அந்த சேல்ஸ் மேனேஜர் சொன்ன பிராண்டையே வாங்கி வந்தோம். ஆறு மாதத்தில் இரண்டு முறை ரிப்பேர். பிராண்ட் புதியது என்பதால் சர்வீஸ் சென்டரும் இல்லை.  அவஸ்தைதான் மிச்சம்.          
 
-தர்மராஜ், மதுரை       
                                     

சொந்த ஊர்ல ஷாப்பிங்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்