ஷேர்லக்: வங்கிப் பங்குகளில் முதலீடு... - புதிய உச்சம்!

‘‘அப்போலோ ஆஸ்பத்திரி வழியாக உமது அலுவலகத்துக்கு வந்து சேர்வதற்குள் தலை சுற்றிவிட்டது’’ என்று சொன்னபடி நம் எதிரில் உட்கார்ந்தார் ஷேர்லக். அவருக்கு க்ரீன் டீயை தந்தோம். மகிழ்ச்சி என்றபடி, நம் கேள்விக்குப் பதில் சொல்லத் தயாரானார்.

“இந்திய பங்குச் சந்தைகள், ஐபிஓவில் இந்த வருடம் சாதனை படைத்து வருகின்றனவே?”

“கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் புதியப் பங்கு வெளியீடு மூலம் அதிக தொகை திரட்டப்பட்டிருக்கிறது. நடப்பு 2016-ம் ஆண்டில் இதுவரைக்கும் சுமார் ரூ. 20,000 கோடி திரட்டப்பட்டிருக்கிறது. இப்படி ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட தொகை கடந்த 2015, 2014 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் முறையே ரூ.13,614,  ரூ.1,200 மற்றும் ரூ.1,283 கோடியாக இருக்கிறது. வரும் அக்டோபரில் ஆர்பிஐ அரை சதவிகிதம் வட்டியைக் குறைத்தால், கம்பெனிகளின் வருமானம் 10 சதவிகிதமாக அதிகரிக்கும் என பங்குத் தரகு நிறுவனம் ஈனம் சொல்வது கவனிக்கத்தக்கது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்