நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வாரத்தின் இறுதியில் ட்ரெண்ட் மாறலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

மெரிக்க வட்டிவிகித முடிவே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும், இறக்கம் மீண்டும் வரக்கூடிய நிலையிலேயே சந்தை இருப்பதையே டெக்னிக்கல்கள் காட்டுகின்றன என்பதால் செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் வேகமான இறக்கம் எந்த நேரத்திலும் வந்துவிடக்கூடும் என்றும், வாரத்தின் மத்தியில் குழப்பமான சூழ்நிலை உருவாகி டைரக்‌ஷன்லெஸ் நிலைமை வந்தால் வியாபாரத்தினை நிறுத்திக்கொள்வது நல்லது என்றும் சொல்லியிருந்தோம்.

புதனன்று பெரிய மாறுதல் இல்லாமலும் ஏனைய நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் இறக்கத்திலும், இரண்டு நாள் ஏற்றத்திலும் முடிவடைந்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 51 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

பெரிய அளவிலான டேட்டா வெளியீடுகள் இல்லாத வாரத்தை எதிர்கொள்ளப் போகிறோம். இறக்கம் கொஞ்சம் அதிகமாக வந்துவிடக்கூடும் என்பதைக் காட்டும் விதமான டெக்னிக்கல் செட் அப்பில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் வந்துவிடவில்லை என்றபோதிலும் செய்திகளின் போக்கே சந்தையின் அடுத்த மேஜர் போக்கை நிர்ணயிக்கும் எனலாம்.

8950 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் கூடிய மல்ட்டிப்பிள் குளோஸிங் நடக்காத வரை ஏற்றம் தொடரும் என்ற முடிவை செப்டம்பர் எக்ஸ்பைரி வரை எடுக்க முடியாது. வால்யூம் நடக்காத பட்சத்தில் பெரிய அளவிலான வியாபார வாய்ப்புகள் இல்லாத வாரமாக அமைந்துவிடக்கூடும்.   எனவே, வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூமின் மீது கண் வைத்தே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்.

டைரக்‌ஷன் லெஸ்ஸாக நீண்ட நேரம் இருக்க ஆரம்பித்தால் வியாபாரத்தினை நிறுத்திக்கொள்வதே நல்லது. அதே போல், ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன் களையும் தவிர்ப்பதே நல்லது.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ட்ரெண்டில் மாறுதல் வரக்கூடும். செப்டம்பர் மாத எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வாரம் என்பதால் கூடுதல் கவனம் தேவை.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்