உள்நாட்டு எரிசக்தி வளங்களை பயன்படுத்துவோம்!

ஹலோ வாசகர்களே..!

நாளொன்றுக்கு சுமார் 7 லட்சம் பேரல் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதைக் குறைக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபிஇசி (OPEC) அமைப்பு. ஒபிஇசி-யின் இந்த நடவடிக்கையை எதிர்கொள்ள நமது மத்திய அரசாங்கம் எந்த வகையில் தயாராக இருக்கிறது என்பது முக்கியமான கேள்வி.  

காரணம், கச்சா எண்ணெய் உற்பத்தியில் கணிசமான பங்கினை வகிக்கிறது இந்த அமைப்பு. இந்த அமைப்புதான் கடந்த ஆண்டில் நமது மொத்த கச்சா எண்ணெய் தேவையின் 60 சதவிகிதத்தை தந்திருக்கிறது. ஒபிஇசி-யின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 2 டாலர்கள் வரை உயர்ந்துவிட்டது. இனிவரும் காலத்தில் அதன் விலை சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 60 டாலரைத் தொடும்பட்சத்தில், நாம் அதிக விலை தந்தே இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். இப்படி அதிக விலை தந்து வாங்கினால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நாம் உயர்த்தவேண்டும். இதனால் விலைவாசி அதிகரிக்கும். அதைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் நம் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும்.

இதெல்லாம் நடக்காமல் தடுக்க மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்கிற கேள்விக்குத்தான்  பதில் இல்லை. கச்சா எண்ணெய் விலை உலக அளவில் குறைவாக  இருந்தபோதும், நமது அரசாங்கம் வரிகளை அதிகப்படுத்தி, அதிக விலையிலேயே விற்றது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் உயர்ந்தாலும், உள்நாட்டில் விலை உயர்த்தாமல் இருக்க முடியும். என்றாலும் இதை தொடர்ந்து செய்ய முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்