ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... கிடைக்காமல் போவதற்கு யார் காரணம்?

ஜெ.சரவணன்

டல் ஆரோக்கியம் மனிதனின் அடிப்படை உரிமை. அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இன்று மருத்துவச் செலவு இருக்கும் நிலையில் நடுத்தர, கீழ்தட்டு மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
 
தரமான மருத்துவமும் ஆரோக்கியமான வாழ்க்கையும் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டவையே ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்கள். குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் பிரீமியமாக நாம் செலுத்தும் தொகையை வைத்து, அவசர காலத்தில் நிதி நெருக்கடியைச் சமாளிக்க நமக்கு திருப்பி அளிக்கப்படுபவைதான் இந்தத் திட்டங்கள்.

வெறும் 28 கோடி பேர்...

ஆனால், இன்ஷூரன்ஸ் துறையின் உண்மை நிலை அப்படி இல்லை. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 28 கோடி பேர் மட்டுமே ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளனர். அதிலும் பெரும்பாலானவை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக எடுக்கப்பட்டவை. மக்கள் தானாக முன்வந்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது அரிதாகவே உள்ளது.

எந்த நோய் வந்தாலும் சிகிச்சையைப் பணம் செலவு செய்து பெறமுடிகிற பணக்காரர்கள்தான் புத்திசாலித்தனமாக இன்ஷூரன்ஸ் எடுக்கின்றனர். ஆனால், நோய்க்கான மருந்து, மாத்திரைகளை வாங்கவோ, சிகிச்சை எடுத்துக்கொள்ளவோ பணமில்லாத நடுத்தர மற்றும் ஏழை மக்கள், எதற்கு வீண் செலவு என்று இன்ஷூரன்ஸ் பக்கமே போவதில்லை. இதனால் உயிரிழப்புகளும், நிதி நெருக்கடியும் ஏற்படுவதைப் பற்றி அவர்கள் யோசிப்பதில்லை.

இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் காரணமா?

இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் துறை வளராமல் இருப்பதற்கு மக்களின் இந்த அறியாமை மட்டும்தான் காரணமா என்றால் இல்லை. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், மருத்துவமனை களும்கூட ஒரு வகையில் காரணம்தான். இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், மருத்துவமனை களும் தங்களின் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால் சாதாரண மக்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது இன்றுவரை சென்று சேராத விஷயமாக இருக்கிறது. 

நம்முடைய இன்ஷூரன்ஸ் துறையின் மாதிரி, அமெரிக்காவிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்திய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அமெரிக்க இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைப் போல செயல்படுகின்றனவா எனில் இல்லை. அமெரிக்காவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்போரின் எண்ணிக்கை கிட்டதட்ட 90%. ஆனால், இந்தியாவில் 20 சதவிகிதம்கூட இல்லை.

சில கேள்விகள்...

ஹெல்த் இன்ஷூரன்ஸ் விஷயத்தில் எங்குதான் பிரச்னை? இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், மருத்துவமனைகளும் சேர்ந்து லாபி செய்வதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா? இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்யும்போது ஏதோ ஒரு காரணம் காட்டி க்ளெய்ம் தர மறுத்து விடுகின்றன நிறுவனங்கள் என்பது  எந்த அளவுக்கு உண்மை என்கிற கேள்விகளை வெல்த்லேடர் நிதி ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.ஸ்ரீதரனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்து சொன்னார் அவர்.

‘‘தற்போது இந்தியாவில் நான்கு பொதுத்துறை மற்றும் 22 தனியார் துறை நிறுவனங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்களை விநியோகித்து  வருகின்றன. இவற்றில் ஹெல்த் இன்ஷூரன்ஸ்களை மட்டுமே செயல்படுத்தும் ஐந்து நிறுவனங்கள் உள்ளன. மற்ற நிறுவனங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸோடு சேர்த்து பிற இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் விநியோகித்து வருகின்றன.

ஹெல்த் இன்ஷூரன்ஸில் பல வகைகள் உள்ளன. இவற்றில் ரூ.50,000 முதல் ரூ. 1 கோடி வரை கவரேஜ்கள் கிடைக்கும். கவரேஜ்களுக்கு ஏற்றபடி பிரீமியம் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்