இ-இன்ஷூரன்ஸ்... இனி எல்லாம் சுகமே!

சோ.கார்த்திகேயன்

ந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் அனைத்து இன்ஷூரன்ஸ் பாலிசித் திட்டங்களும் ஆன்லைன் வடிவத்தில் வழங்கப்படவிருக்கின்றன. புதிய பாலிசிகள் மட்டுமின்றி, ஏற்கெனவே எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் இனி ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம்.
  சில ஆண்டுகளுக்குமுன், இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியமான ஐஆர்டிஏஐ (IRDAI) 13 இலக்க டிஜிட்டல் இ-இன்ஷூரன்ஸ் கணக்கைக் கொண்டுவந்தது. அப்போது அது கட்டாயம் ஆக்கப்படவில்லை. இப்போது அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இ-இன்ஷூரன்ஸ் கணக்கு!

இதன்படி இப்போது, ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் அனைத்துவகையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் ஆன்லைன் வடிவத்தில் வழங்கவேண்டும். ஆயுள், ஆரோக்கியம், மோட்டார், ஓய்வூதிய பாலிசி மற்றும் அனைத்து வகையான பொது இன்ஷூரன்ஸ் பாலிசிகள் உள்பட எந்தவொரு பாலிசியை எடுப்பதாக இருந்தாலும் இ-இன்ஷூரன்ஸ் கணக்கு அவசியம் இருக்கவேண்டும். புதிதாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே எடுத்த இந்த பாலிசியை புதுப்பிக்கும்போதுகூட இ-இன்ஷூரன்ஸ் கணக்கு இருப்பது அவசியம்.

எதற்கெல்லாம் இ-இன்ஷூரன்ஸ் கணக்கு?


டேர்ம் பிளான் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் போன்ற ரூ.10,000-க்கும் அதிகமான ஆண்டு பிரீமியம் அல்லது ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான காப்பீட்டுத் தொகை கொண்ட பாலிசிகளுக்கு இந்த இ-இன்ஷூரன்ஸ் கணக்கு இனி கட்டாயம்.

எப்படித் தொடங்குவது?


ஸ்டெப் 1: முதலில் இ-இன்ஷூரன்ஸ் நிர்வகிக்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்!

சிஏஎம்எஸ் ரெபாஸிட்டரி சர்வீசஸ், எஸ்ஹெச்சிஐஎல் புராஜெக்ட் லிமிடெட், சென்ட்ரல் இன்ஷூரன்ஸ் ரெபாஸிட்டரி, கார்வி இன்ஷூரன்ஸ் ரெபாஸிட்டரி மற்றும் என்எஸ்டிஎல் டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் என ஐந்து பதிவு செய்யப் பட்ட இன்ஷூரன்ஸ் ரெபாஸிட்டரி நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏஐ, உரிமம் வழங்கியுள்ளது. இதில் நீங்கள் எந்த நிறுவனத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொண்டு உங்களுடைய இ-இன்ஷூரன்ஸ் கணக்கைத் துவக்கலாம். சேவை நிலையைத் தவிர, இந்த நிறுவனங்களுக்கிடையே எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. உங்கள் இன்ஷூரன்ஸ் ரெபாஸிட்டரி வழங்குநர் சேவை திருப்தி இல்லை என்றால், நீங்கள் பின்னர் மற்றொரு ரெபாஸிட்டரி நிறுவனத்தில் உங்கள் இ-இன்ஷூரன்ஸ் கணக்கை மாற்றிக் கொள்ளலாம்.

ஸ்டெப்  2 : படிவத்தைப் பூர்த்தி செய்து ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 

  மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்தில் ஏதாவது ஒரு ரெபாஸிட்டரி நிறுவனத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் உங்களுடைய இ-இன்ஷூரன்ஸ் படிவத்தை நிரப்பி, உங்கள் கேஒய்சி சார்ந்த ஆவணங்களை இணைத்தபிறகு நீங்கள் வசிக்கும் ஊரில் உள்ள அலுவலகத்தில் சமர்ப்பித்தால் போதும். இதில் சிஏஎம்எஸ் ரெபாஸிட்டரி நிறுவனத்துக்கு மட்டும் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதன்பின் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்