பிஇ - எஸ்டிபி : அதிக லாபம் தரும் - புதிய முதலீட்டு முறை!

எம்.கண்ணன் முதலீட்டு ஆலோசகர்

மீபத்தில் உச்சத்தைத் தொட்ட சந்தை தற்போது சுமார் இரண்டு, மூன்று சதவிகிதம் குறைந்து வர்த்தகம் ஆகிறது. இந்த சிறிய இறக்கத்தினால் சந்தையின் மதிப்பு என்பது பெரிய அளவில் குறைந்து விடவில்லை. எனவே, அதிக விலை தந்தே பங்குகளை வாங்கவேண்டிய கட்டாயம் இருப்பதால், இப்போதைக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் ஒதுங்கி நிற்பதே சரி என பல முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் இதே மாதிரியான எண்ணத்துடன் எப்போது சந்தை இறங்கும் என்கிற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

உள்ளபடி பார்த்தால், இப்படி ஒதுங்கி நிற்கத் தேவையே இல்லை. நம் கையில் மொத்தமாக பணம் இருந்தாலோ அல்லது தீபாவளி போனஸ் கிடைப்பதாக இருந்தாலோ அல்லது 7-வது கமிஷன் மூலம் கணிசமான தொகை கிடைப்பதாக இருந்தாலோ, சந்தை இறங்கும் வரை அதை வங்கிக் கணக்கில் வைத்திருப்பதைவிட பிஇ - எஸ்டிபி (PE - STP) என்னும் புதிய முதலீட்டு முறையின் மூலம் சந்தையின் மதிப்புக்கேற்றபடி நம் பணத்தை சரியாக முதலீடு செய்ய முடியும்.

தற்போது மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸின் சராசரி பிஇ ரேஷியோ (Price Earning Ratio) 20.78-ஆக உள்ளது.

சென்செக்ஸின் நெடுநாளைய சராசரி பிஇ 18.6. சென்செக்ஸின் அதிகபட்ச பிஇ 29-ஆகவும் (வருடம் 2000), குறைந்தபட்ச பிஇ 12 ஆகவும் (வருடம் 2008) இருந்திருக்கிறது. இதிலிருந்து நமக்குத் தெளிவாகத் தெரிவது, சந்தையின் மதிப்பு சற்று அதிகம் என்பதே. இந்த சமயத்தில் கையில் இருக்கும் மொத்தப் பணத்தையும் பங்குச் சந்தையில் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், மதிப்பு அதிகமாக இருக்கும்போது குறைவாகவும், குறைவாக உள்ளபோது அதிகமாகவும் முதலீடு செய்யவேண்டும்.

ஆனால் மதிப்பு எப்போது அதிகமாக உள்ளது அல்லது குறைவாக உள்ளது என்பதை நாமே கண்டறிவது கொஞ்சம் கடினம். இந்த வேலையை நமக்காக டைனமிக் ஈக்விட்டி ஃபண்டுகள் செய்கின்றன. கடந்த காலங்களில் இந்த வகை ஃபண்டுகள் ஓரளவு நல்ல வருமானத்தைத் தந்திருக்கின்றன.

இப்போது டைனமிக் ஃபண்டுகளைவிட சிறப்பான முதலீட்டுக்கு வழிவகுக்கும் ஒரு புதிய முதலீட்டு முறையாக வந்திருக்கிறது பிஇ - எஸ்டிபி (PE - STP) என்கிற முதலீட்டு முறை. ஐடிஎஃப்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த புதிய முதலீட்டுத் முறையிலான ஃபண்டில் நாம் முதலீடு செய்யும் தொகை முதலில் கடன் சார்ந்த திட்டங்களில் (Debt Fund) முதலீடு செய்யப்படும். அதிலிருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் பங்கு சார்ந்த திட்டங்களுக்கு எஸ்டிபி (STP - Systematic Transfer Plan) மூலம் மாற்றப்படும். இப்படி மாற்றும்போது ஒவ்வொரு மாதத்திலும் ஒரே அளவிலான தொகையை மாற்றம் செய்யாமல், சந்தை மதிப்பு குறைவாக இருக்கும்போது அதிகமான தொகையும், தற்சமயம் இருப்பதுபோல் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும்போது குறைவான தொகையையும் மாற்றுவதன் மூலம் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பினை நாம் உருவாக்கிக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்