ஜீரோ ரிஸ்க்... ஜீரோ வருமானம்!

ல்ல முதலீடு என்பது பணவீக்க விகிதத்தைத் (அதாங்க, விலைவாசி உயர்வு) தாண்டி சில சதவிகிதம் கூடுதலாக வருமானம் தருவதாக இருக்கவேண்டும். அதற்கு முதலீட்டில் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டியது அவசியம்.

எப்போதுமே முதலீட்டில் ரிஸ்க் இல்லை எனில், வருமானமும் ஜீரோவாகவே இருக்கும். உதாரணம் வங்கி, தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்கள் போன்ற முதலீடுகளில், பணவீக்கத்தைக் கழித்தால் மிகக் குறைந்த வருமானம் அல்லது வருமானமே இல்லாத நிலையே இருக்கக்கூடும். மேலும், இந்த வருமானங்களுக்கு வருமான வரி கட்ட வேண்டியிருக்கும் பட்சத்தில், வருமானம் மைனஸாக இருக்கும். உங்களின் முதலீடு நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி வருமானம் தர வேண்டும் எனில் நிறுவனப் பங்குகள், பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில்  முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்