ஊருவிட்டு ஊரு வந்தும்... பிபிஎஃப் பணத்தை பெறுவது எப்படி?

சோ.கார்த்திகேயன்

ரு ஊரில் பிபிஎஃப் கணக்கைத் துவங்கினாலும், பிற்பாடு பணி நிமித்தம் காரணமாக மற்றொரு நகரத்துக்குப் செல்லவேண்டிய நிலை நம்மில் பலருக்கு ஏற்படத்தான் செய்கிறது. இப்படி வேறொரு நகரத்துக்குச் சென்றபின், பிபிஎஃப் கணக்கு முதிர்ச்சி அடையும் முன்பே, அதிலிருக்கும் பணத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ திரும்பப் பெறவேண்டும் எனில் அதற்கு பிபிஎஃப் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இன்றைய நிலையில், நீங்கள் பிபிஎஃப் அலுவலகத்துக்குச் செல்லாமலே, இந்தியாவில் நீங்கள் எங்கிருந்தாலும் அங்கிருந்தபடி உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை திரும்பப் பெறுவதற்கான வழிகள் உருவாகிவிட்டன.

வேறு ஒரு நகரத்தில் இருந்தபடி...!

இதுவரை, எஸ்பிஐ அல்லது பஞ்சாப் நேஷனல் வங்கி, விஜயா வங்கி போன்ற சில பொதுத் துறை வங்கிகளில் பிபிஎஃப் கணக்கை வைத்திருப்​பவர்கள்  மட்டுமே வேறு ஒரு நகரத்தில் இருந்தாலும் பிபிஎஃப் பணத்தை அந்த அலுவலகத்துக்குச் செல்லாமலே பெறமுடியும் என்கிற நிலை இருந்தது. உங்கள் பிபிஎஃப் கணக்கு தபால் அலுவலகத்தில் இருந்தால், நீங்கள் வேறு ஒரு நகரத்தில் இருந்தபடி உங்களால் பணத்தை பெறமுடியாது.  உங்கள் பிபிஎஃப் கணக்கை தபால் அலுவலகத்தில் இருந்து வங்கிக்கு மாற்றியபின் பின்வரும்  ஸ்டெப்களின்படி நடந்தால், நீங்களும் பிபிஎஃப் பணத்தை எங்கு இருந்து வேண்டுமானாலும் எளிதாகப் பெறலாம். 

ஸ்டெப் 1 :
உங்கள் கேஒய்சி சார்ந்த ஆவணங்களைத் தயார் செய்யுங்கள்!

உங்கள் பிபிஎஃப் பணத்தை திரும்பப் பெறுவதற்கான படிவம் சி, உங்கள் பணம் எந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் என்பதற்காக ரத்து செய்யப்பட்ட காசோலை, உங்கள் அடையாள மற்றும் முகவரிச் சான்று, உங்கள் பிபிஎஃப் கணக்கு புத்தகம் (உங்களிடம் இருந்தால் மட்டும்) உள்ளிட்ட உங்கள் கேஒய்சி சார்ந்த ஆவணங்களை முதலில் ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆவணங்கள்  எதிலும் நீங்கள் கையெழுத்திட வேண்டாம். ஏனெனில், வங்கி அதிகாரிகள் முன்னிலையில்தான் இந்த ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும்.

ஸ்டெப் 2: உள்ளூர் வங்கிக் கிளைக்கு செல்லுங்கள்!

அடுத்தபடியாக, நீங்கள் தற்போது எந்த ஊரில் வசித்து வருகிறீர்களோ, அந்த ஊரில் உள்ள வங்கிக் கிளைக்கு சென்று, ‘என்னுடைய பிபிஎஃப் கணக்கு வேறு ஒரு ஊரில் உள்ளது; நான் என்னுடைய பிபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெறவேண்டும்’ என அந்த வங்கி அதிகாரியிடம் சொல்லுங்கள். உங்களுடைய ஆவணங்களுக்கு  சான்றளிக்குமாறு அவரிடம் கேளுங்கள்.

அவர் உங்களுடைய ஆவணங்களில் கையெழுத்​திடுமாறு கேட்பார். அதன்பின் வங்கியாளர்கள் ஆவணங்களில் கையொப்பம் அல்லது சான்றொப்பம் அளித்து, உங்கள் ஆவணம் சரியாக உள்ளது என்பதை தெரிவிப்பார்கள். இது மட்டுமின்றி, ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வங்கியாளர் உங்களுடைய ஆவணத்தில் அவருடைய பெயர் மற்றும் கையொப்பக் குறியீட்டைக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் நடந்தால்தான் உங்கள் சான்றொப்பம் முழுமை அடையும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்