ட்விட்டர் விற்பனைக்கு!

ஞா.சுதாகர்

லகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வலம்வரும் ட்விட்டர் நிறுவனம், கூடிய விரைவில் விற்பனையாக இருப்பதாக வெளியான செய்தி கடந்த வாரம் இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குப் போட்டியாகக் கருதப்பட்ட ட்விட்டர், கடந்த சில ஆண்டுகளாக  டிஜிட்டல் உலகில் தடுமாறி வருகிறது. தற்போதைய ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை சுமார் 113 கோடி பேர். ஆனால், ட்விட்டர் பயனாளிகளின் எண்ணிக்கை 31.3 கோடிதான். மேற்கொண்டு பெருமளவில் புதிய முதலீட்டாளர்களை சென்று சேரமுடியாததாலும் பல்வேறு வகையில் கிடைக்கும் வருமானம் குறைந்ததாலும் டிவிட்டர் தடுமாற ஆரம்பித்தது. எனவேதான், இந்த நடவடிக்கை என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். 

ட்விட்டர் நிறுவனத்தின் துணை நிறுவனரான  ஜேக் டோர்ஸி, 2015-ம் ஆண்டு முதல் மீண்டும் ட்விட்டர் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ட்விட்டரின் லாபத்தை அவரால் அதிகரிக்க முடியவில்லை. மேலும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் ஃபேஸ்புக்குடன் இணைந்ததன் மூலமாக, அவற்றால் முன்பைவிட சிறப்பாக செயல்பட முடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்