மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி?

மு.சா.கெளதமன்

டந்த டிசம்பரில் சென்னை புறநகர் பகுதிகளில் வந்த வெள்ளத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம். இதோ கூடிய சீக்கிரத்திலேயோ டிசம்பர் வரவிருக்கிறது. இந்த ஆண்டும் பெருமழை பெய்தால், அதிலிருந்து நம்மையும் நம் வீட்டையும் காப்பாற்றிக் கொள்ள என்ன வழி..?  சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்த யுனிக் ஃப்ளாட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொறியாளர் ஆத்மா விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.

‘‘முதலில், புதிதாக வீடு கட்டுபவர்கள் வெள்ளத்தில் சிக்காதபடி தங்கள் வீடுகளை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை சொல்கிறேன்’’ என்று ஆரம்பித்தார் அவர்.

புதிதாக வீடு கட்டுகிறவர்களுக்கு :

‘‘ஒரு புதிய வீடு என்றால் குறைந்தபட்சம் 40 வருடங்கள் வரை தாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறேன்.

1. அடித்தள (Basement) உயரம்!

பொதுவாக, புது வீடு கட்டும்போது, அடித்தளத்தை சற்றே உயரமாக வைத்துக் கட்டுங்கள். தார் அல்லது சிமென்ட் சாலை இருந்தால், 3 அடி வரை அடித்தளத்தை உயர்த்திக் கட்டுங்கள். அதுவே மண் சாலைகள் என்றால் 5 அடி வரை உயர்த்திக் கட்டிக்கொள்ளுங்கள். அடித்தளத்தை எவ்வளவுக்கு எவ்வளவு உயர்த்திக் கட்டுகிறோமோ, அந்த அளவுக்கு மழை மற்றும் வெள்ளம் போன்ற சமயங்களில் பாதுகாப்பாக இருக்கும்.

2. கிரவுண்ட் ஃப்ளோர் பார்க்கிங்!


பொதுவாக, வீட்டின் கிரவுண்ட் ஃப்ளோரில் பார்க்கிங் அமைக்கப்பட்டு இருந்தால், வீடு சற்று வலுவிழந்து இருக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அப்படி பயப்படத் தேவையில்லை. அபார்ட்மென்ட்டுகளின் தரைத்தளம் பார்க்கிங்காக இருந்தால், மழை மற்றும் வெள்ள காலங்களில் தரை தளத்தை மட்டுமே பாதிக்கும். (ஆனால், கார் பார்க்கிங்கில் நிறுத்தி இருக்கும் கார் பாதிப்படையும் என்பதால், அதற்கு வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும்!) மற்ற தளங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். எனவே, வீடுகளை வாங்கும்போது தரைதளம் பார்க்கிங் இருக்கும் அபார்ட்மென்ட் களாக வாங்கலாம். அப்படியும் சந்தேகம் வந்தால் முதல் தளத்தையும் தவிர்த்துவிட்டு, இரண்டாவது தளத்தில் இருந்து வாங்கலாம்.

3. சர்வே எண் பாருங்கள்!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அலுவலகத்தில் நாம் வீடு வாங்க இருக்கும் பகுதிகள் நீர் பிடிப்பு பகுதிகளா என்பதைக் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும். இதற்கு சர்வே எண் இருந்தால் போதும். தேவைப் பட்டால், பொறியாளர்களின் உதவியோடு இடத்தைப் பார்வையிட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்