அன்று 50 ஆயிரம்... இன்று 1 கோடி!

குதூகலிக்கும் முதலீட்டுக் குடும்பம் படம் : க.தனசேகரன்

நாம் குடும்பத்தோடு வீட்டில் உட்கார்ந்து டிவி பார்ப்போம். ஆனால், முதலீடு செய்வோமா? நாங்க செய்வோமே என்கிறது பென்னாகரத்தை சேர்ந்த ரவியின் குடும்பம். சமீபத்தில் நாணயம் விகடன் சேலத்தில் நடத்திய ‘மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்’ என்ற கட்டண வகுப்புக்கு ரவி, ரவியின் மனைவி மஹாலட்சுமி, மகள் நிபா, நிபாவின் கணவர் விக்னேஷ் என நான்கு பேரும் வந்திருந்தது கண்டு அனைவரும் உற்சாகமாகப் பாராட்டினார்கள். முதலில் நாம் ரவியுடன் பேசினோம்.

‘‘நான் ஒரு பிசினஸ்மேன். உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வியாபாரம் செய்வது என் பிசினஸ். என் மனைவி மஹாலட்சுமி ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பொருளாதார ஆசிரியராக இருக்கிறார். என் மகள் நிபாவுக்கு கடந்த வருஷம்தான் கல்யாணமாச்சு. என் மகன் பிரணவ் பொறியியல் படிக்கிறான். அவனுக்கு லீவு கிடைக்கவில்லை. இல்லாவிட்டால், அவனையும் இந்தக் கட்டணப் பயிற்சி வகுப்புக்கு அழைத்திருப்போம்’’ என்றார் ரவி.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ரவிக்கு புதிய விஷயமல்ல. 1988 முதலே பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறார் ரவி. “1988-ல் இருந்தே  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மாதிரி சில பங்குகள்ல முதலீடு செஞ்சிருக்கேன். அப்புறம் ஐசிஐசிஐ பேங்க், கரூர் வைஸ்யா பேங்க், டிசிஎஸ் மாதிரி சில குறிப்பிட்ட பங்குகள்ல மட்டும் முதலீடு செஞ்சிருக்கேன். அப்பப்ப பணம் தேவைப்பட்டா நான் வாங்குன பங்குகளை கொஞ்சம் வித்து, சமாளிப்பேன். என் மகளோட கல்யாணத்துக்கு தேவையான பணத்துல ஒருபகுதிகூட இப்படித்தான் எடுத்தேன். இதுவரைக்கும் நான் மொத்தமா முதலீடு செஞ்சது வெறும் 50,000 ரூபாதான். இப்ப அது சுமாரா        10 லட்சம் ரூபா மதிப்புள்ள பங்கா வளர்ந்திருக்கு. நான் அப்பப்ப பணத்தை எடுக்காம அப்படியே விட்டிருந்தேன்னா, இப்ப சுமாரா ஒரு கோடி ரூபாயாவது என்கிட்ட இருந்திருக்கும்’’ என்று சொல்லி சிரிக்கிறார் ரவி.

மீண்டும் அவரே தொடர்ந்தார். ‘‘பொதுவா, எங்க குடும்பத்தோட வழக்கமே நாங்க ஒருமுறை ஒரு நல்ல கம்பெனி பங்கு வாங்குனோம்னா, அதை விக்கணும்னு நினைக்கவே மாட்டோம். இந்த ஒன் வே இன்வெஸ்ட்மென்ட் எங்களுக்கு நல்ல லாபம் தந்திருக்கு’’ பெருமையுடன் சொன்னார் ரவி.

அவரைத் தொடர்ந்தார் மனைவி மஹாலட்சுமி... ‘‘என் கணவர் வியாபாரம் செய்றதுல காட்டும் அக்கறையையும், கவனத்தையும் குடும்பத்தோட நிதி மேலாண்மையிலும் காட்டுவார். எப்போதுமே நிதி சம்பந்தப் பட்ட விஷயங்களைப் படிச்சி தெரிஞ்சுக்கச் சொல்வார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்