பளிச் லாபம் 15 பங்குகள்

பிரவீன் ரெட்டி, நிறுவனர், Induswealth.com

ங்குச் சந்தையில், நீண்டகால அடிப்படையில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் கிடைக்கும் என்பதை உணர்ந்த பெரும்பாலான முதலீட்டாளர்கள், எஸ்ஐபி எனும் சீரான முதலீட்டு திட்டம் மூலம் முதலீடு செய்து வருகின்றனர். அப்படிச் செய்யப்படும் எஸ்ஐபி முதலீடுகள், கடந்த 10 வருடங்களில் எப்படிப்பட்ட வருமானம் கொடுத்துள்ளது என்பதை நிறுவனங்கள் வாரியாக ஆராய்ந்தோம். ரூ.15,000 கோடிக்கு மேல்  மார்க்கெட் கேபிட்டலைசேஷன் கொண்ட நிறுவனப் பங்குகள், கடந்த 10 ஆண்டுகளில் கொடுத்த எஸ்ஐபி வருமானத்தை ஆராய்ந்து, அவற்றில் டாப் 15 நிறுவனங்களை இங்கே கொடுத்துள்ளோம்.                

இதில் இந்தியப் பங்குச் சந்தை, வரலாறு காணாத வகையில்  பெரும் சரிவுக்கு உள்ளான கடந்த 2008-ம் ஆண்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஐபி வருமானம்!

ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் எஸ்ஐபி (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) முறையின் மூலம் தொடர்ந்து பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் சென்செக்ஸ் குறியீட்டு ஃபண்டு களில் முதலீடு செய்திருந்தால், அவருக்கு 62 சதவிகிதம் வருமானம் கிடைத்திருக்கும்.

அதுவே இங்கே தரப்பட்டுள்ள 15 முன்னணி  நிறுவனப் பங்குகளில், அதே தொகையை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்திருந்தால், அவர் ஈட்டிய சராசரி வருமானம் 1,360 சதவிகிதமாக இருந்திருக்கும்.(பார்க்க : அட்டவணை-1)

அட்டவணை 1-ல் தரப்பட்டுள்ள பங்குகளில் மாதம் ரூ.1000 முதலீடு செய்திருந்தால், வருமானம் எவ்வளவு?

மாதம் ரூ.1,000 எஸ்ஐபி மூலம் சென்செக்ஸ் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் 10 ஆண்டுகளில் ரூ.74,400 லாபம் கிடைத்திருக்கும். (இது 62% வருமானம்)

மாதம் ரூ.1,000 எஸ்ஐபி மூலம் அஜந்தா பார்மா பங்கில் முதலீடு செய்திருந்தால் 10 ஆண்டுகளில் ரூ.94,16,500 வருமானம் கிடைத்து இருக்கும். (7,847% வருமானம்)

மாதம் ரூ.1,000 எஸ்ஐபி மூலம் பெர்ஜர் பெயின்ட்ஸ் பங்கில் முதலீடு செய்திருந்தால் 10 ஆண்டுகளில் ரூ.9,75,700 வருமானம் கிடைத்திருக்கும் (813% வருமானம்).

மாதம் ரூ.1,000 எஸ்ஐபி மூலம் பிடிலிட்டி பங்கில் முதலீடு செய்திருந்தால், 10 ஆண்டுகளில் ரூ.5,78,200 வருமானம் கிடைத்திருக்கும். (482% வருமானம்)

எஸ்ஐபி முறையின் மூலம் மாதம்  1,000 ரூபாயை இந்த 15  நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால், 10 ஆண்டுகளில் சராசரியாக ரூ. 16,33,500 வருமானம் கிடைத்திருக்கும். (1,360% வருமானம்) (பார்க்க : அட்டவணை 2)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்