பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை.SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ் :

கடந்த வாரம் திடீரென உருவான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் காரணமாக சந்தை இறங்கத் தொடங்கியது. அன்றுதான் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வேறு என்பதால் நிலைமையை மேலும் மோசமாக்கியது. அன்றைய டிரேடிங்கில்  நடக்கவேண்டிய வழக்கமான அம்சங்கள் எதுவும் இல்லை. காண்ட்ராக்ட்டுகளை முடிப்பதிலேயே பலரும் கவனமாக இருந்தால், ஸ்கொயர் ஆஃப் கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. 

சந்தை இன்னும் கீழே இறங்கும் என்கிற பயத்தால், பங்குத் தரகர்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அளவுகளைக் குறைக்க, அது சந்தையில் இன்னும் அதிக பயத்தை உருவாக்கியது. இதனால் பல துறை சார்ந்த பங்குகளின் விலையும் நன்கு இறக்கம் கண்டன. இச்சிமொகு கோடுகளின்படி (Ichimoku lines), இந்த இறக்கம் சந்தையை சப்போர்ட்டுக்குக் கொண்டு வந்தது. 

நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி ஆகிய இரண்டு இண்டெக்ஸ்களில், பேங்க் நிஃப்டி புதிய ஏற்றம் காண வாய்ப்பிருக்கிறது என்று சொல்லலாம். வரும் வாரத்தில் ஆர்பிஐ கூட்டம் இருப்பதால், பேங்க் நிஃப்டி அதிகரித்து வர்த்தகமாவதற்கான கூடுதல் சாத்தியங்கள் உள்ளது. அதிகப்படியான பங்குகள் விற்கப்படும் போது பேங்க் நிஃப்டி 19000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தக மானதால், இறக்கம் என்பது முடிந்து விட்டதாகவே தோன்றுகிறது. தவிர, வெள்ளிக்கிழமை அன்று பேங்க் நிஃப்டியின் பேட்டன்கள் பாசிட்டிவ்வாகவே இருந்தது. இது அடுத்து வரும் வாரங்களில் 19700 புள்ளிகள் வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த 19700 புள்ளிகளே சப்ளை லெவல்களாகவும், புதிய உச்சங்களைத் தொடும் புள்ளிகளாகவும் இருக்கலாம்.

நிஃப்டி, பேங்க் நிஃப்டி அமைக்கும் டிரெண்ட்களையே பின்தொடர வாய்ப்புள்ளது. எனவே, பேங்க் நிஃப்டி யானது வரும் வாரத்தில் ட்ரெண்ட்டை நிர்ணயிக்கிறதா என்பதை பார்ப்பது அவசியம். ஒட்டுமொத்தமாக சந்தையை பார்க்கும்போது, ஏற்றத்துக்கான டிரெண்ட் முடிவடைந்துவிட்டதாகவே தெரிகிறது. அடுத்து வரும் வாரங்களில், சந்தை உயரும்போதெல்லாம் முதலீடுகளை சரியான தருணத்தில் விற்று வெளியேறு வதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்