நிஃப்டி எதிர்பார்ப்புகள்: சந்தையின் போக்கை செய்திகளும் நிகழ்வுகளும் நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

வாரத்தின் இறுதியில் ட்ரெண்டில் மாறுதல் வரலாம்  என்றும், இறக்கம் கொஞ்சம் அதிகமாக வந்துவிடக்கூடும் என்பதைக் காட்டும்விதமான டெக்னிக்கல் செட் அப்பில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் வந்து விடவில்லை என்றும், சந்தை செல்லும் திசை தெரியாமல் ‌ நீண்ட நேரம் இருக்க ஆரம்பித்தால், வியாபாரத்தினை நிறுத்திக்கொள்வதே நல்லது என்றும், வியாழன் மற்றும் வெள்ளிக்​கிழமைகளில் ட்ரெண்டில் மாறுதல் வரக்கூடும். கவனம் தேவை என்றும் சொல்லியிருந்தோம். 

8555 என்ற குறைந்த அளவையும் 8809 என்ற அதிக அளவையும் கண்ட நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 220 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் ரிசர்வ் வங்கியின் மானிட்டரி பாலிசி ரிவ்யூ இருக்கிறது. அதில் வரும் முடிவுகளும் செய்திகளும் நிகழ்வுகளும் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும். 

மீண்டும் 8800 என்ற லெவலைத்​தாண்டி மல்ட்டிபிள் குளோசிங் நடக்காத வரை இறக்கம் நின்றுவிட்டது என்று எடுத்துக்கொள்ள முடியாத டெக்னிக்கல் சூழலே சந்தையில் தொடர்கிறது.  ஷார்ட் கவரிங்கினால் வரும் ஏற்றங்களை நம்பி பெரிய அளவிலான வியாபாரத்தில் இறங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் 8510 என்ற லெவலைத் தாண்டி இறங்கினால், தற்போதைக்கு 8320 வரை சென்றபின்னரே சந்தை நிதானிக்க வாய்ப்புள்ளது. எனவே, புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரத்தை முழுமையாக தவிர்ப்பதே நல்லது.

ஹைரிஸ்க் டிரேடர்கள்கூட நல்ல பண்டமெண்டல்கள் இருக்கும் ஸ்டாக்குகளில் மட்டும் சிறிய எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடன் கூடிய உடனுக்குடன் லாபத்தை புக் செய்துகொள்ளுமாறும் அமையும் வியாபாரத்துக்கு மட்டுமே முயற்சிக்கவேண்டியிருக்கும். ஷார்ட் சைட் வியாபாரத்தையும் ஓவர்நைட் பொசிஷன்களையும் முழுமையாகத்​தவிர்க்க​வேண்டிய காலகட்டம் இது. செய்திகளின் மீது தொடர்ந்து கவனம் வைத்தே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்