குறுகிய காலத்தில் அதிக ஆதாயம் ஆபத்தானது..! - ஈரோட்டில் முதலீட்டு விழிப்பு உணர்வு..!

சி.சரவணன்

குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், ‘குறுகிய காலத்தில் அதிக ஆதாயம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் அனைத்தும் ஆபத்தானவை’ என்றார் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் (முதலீட்டாளர் கல்வி) எஸ்.குருராஜ். நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ஈரோட்டில் நடத்திய விழிப்பு உணர்வு கூட்டத்தில் பேசிய அவர், ‘‘10,000 ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த ஆறு மாதத்தில் 20,000 ரூபாய் கிடைக்கும் என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்தால் அதோ கதிதான்’’ என்றார்.  

பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி பேசும்போது, உலகின் எட்டாவது அதிசயம் என்று சொல்லப்படும் கூட்டு வளர்ச்சியின் சக்தி (பவர் ஆஃப் காம்பவுண்டிங்) எப்படி செயல்படுகிறது. முதலீடு செய்த பணம் எப்படி பன்மடங்கு பல்கி பெருகிறது என்பதை  உதாரணங்களுடன் விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்