சீர்திருத்தங்களே இந்தியாவை தொடர்ந்து முன்னேற்றும்!

ஹலோ வாசகர்களே..!

புது டெல்லியில் நடந்த இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் பேசிய நிபுணர்கள், ‘சர்வதேச அளவில் இந்தியா இன்றைக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது. எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி காணும்’ என்று சொல்லி இருக்கின்றனர். இது உள்ளபடியே நம்மை மகிழ்விப்பதாகவே இருக்கிறது.

பொருளாதார ரீதியிலான சீர்திருத்தங்கள் காங்கிரஸின் ஆட்சிக் காலத்திலேயே வேகம் எடுக்கத் தொடங்கிவிட்டது என்றாலும் மோடியின் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில்தான் முக்கியமான பல சீர்திருத்தங்கள் நிறைவேறியுள்ளன என்பதை மறுக்க முடியாது. இப்படி நிறையேறிய சீர்திருத்தங்கள் பலவாக இருந்தாலும் பொருட்கள் மற்றும் சேவை வரிச் சட்டமும், கடன் திவால் சட்டமும் மிக முக்கியமானவை. இந்தக் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் உலக வணிக போட்டியிடும் திறன் குறியீட்டில் இந்தியா 55-வது இடத்திலிருந்து 39 இடத்துக்கு முன்னேறியுள்ளது.

என்றாலும், நமது பொருளாதாரம் வேகமாக வளர்வதற்கு இன்னும் பல சீர்திருத்தங்களை மோடி அரசாங்கம் தொடர்ந்து செய்யவேண்டும் என்பதையும் இந்த உச்சி மாநாட்டில் பேசிய நிபுணர்கள் அறிவுறுத்தத் தவறவில்லை. ‘‘நாம் தொடர்ச்சியாக 8 சதவிகிதத்துக்கு மேல் வளரவேண்டும் எனில், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் முக்கியமான பல மாற்றங்களை செய்தாகவேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார் நிதி ஆயோக் அமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரி.

இந்த கூட்டத்தில் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘கீழ்மட்டங்களில் உள்ள நிர்வாக ரீதியிலான தடைக்கற்களைக் களைந்தெடுக்க நாம்  இன்னும் கடுமையாக முயற்சிக்கவேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்