அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு!

சோ.கார்த்திகேயன்

பால்களைக் கொண்டுவருவதும் கொண்டு செல்வதும்தான் அஞ்சல் அலுவலகங்களின் முக்கிய வேலை என்று நாம் நினைக்கிறோம். அஞ்சல் அலுவலகங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளையும் வழங்குவது பலருக்கும் தெரியாத உண்மை.

இன்று நேற்றல்ல,1884-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வழங்கி வருகின்றன அஞ்சல் அலுவலகங்கள். அஞ்சல் அலுவலகங்களில் எடுக்கப்படும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு அதிக போனஸ் கிடைக்கும் என்பதால்தான் பலரும் இதில் சேர்ந்து பலனடைந்து வருகின்றனர். அஞ்சல் ஆயுள் காப்பீடு குறித்து முழுமையாக  தெரிந்துகொள்ள, சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் இயக்குநர் ஏ.சரவணனை சந்தித்தோம். அதுபற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

“அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் பிரபலப்படுத்த ஆகும் செலவு குறைவு என்பதால், அந்தத் தொகை முழுவதும் பாலிசிதாரர்களுக்கு போனஸ் வழியாகச் சென்று சேர்கிறது.
தற்போது, அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சமாகவும், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 20,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
இரண்டு வகைகள்!

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அரசு ஊழியர்கள், நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று, அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI). இரண்டாவது, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (RPLI). முதல் திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவியுடன் நடைபெறும் நிறுவனங்களின் ஊழியர்களும், இரண்டாவது திட்டத்தில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.
 
பாலிசி வகைகள்!

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு என்கிற இரண்டு திட்டங்களில் முழு ஆயுள் காப்பீடு, மாற்றத்தக்க ஆயுள் காப்பீடு, குறித்த கால காப்பீடு, குறித்த கால எதிர்பார்ப்பு காப்பீடு, கணவன் மனைவி குறித்த கால ஆயுள் காப்பீடு, குழந்தைகள் பாலிசி என 6 வகைகள் இருக்கின்றன.

சிறப்பம்சங்கள்!

மற்ற நிறுவனங்கள் அளிக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைவிட அஞ்சல் அலுவலகங்களில் அளிக்கப்படும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் பல சிறப்பம்சங்கள் உண்டு.

* மற்ற இன்ஷூரன்ஸ் திட்டங்களைவிட குறைந்த பிரீமியம்.

* அதிக போனஸ் (ஒரு லட்சத்துக்கு, ஒரு வருடத்துக்கு சுமார் ரூ.1,500). கட்டும் பிரீமியத்துக்கு வருமான வரிச் சலுகை உண்டு. முதிர்வுத் தொகைக்கு முழு வரி விலக்கு உண்டு.

* மூன்று ஆண்டுகளுக்குப் பின் சுலபமான கடன் வசதி; வாரிசு நியமனம்; தேவைப்பட்டால் வாரிசை மாற்றிக் கொள்ளும் வசதி.  பணியிலிருந்து விலகி விட்டாலும் பாலிசியைத் தொடரலாம்.

* குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.20,000. அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை ஒருவர் எத்தனை பாலிசிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

* பிரிமீயத்தை இந்தியாவில் எந்த அஞ்சலகத்திலும் செலுத்தலாம். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்