கொடைக்கானல்! - ரியல் எஸ்டேட் ரவுண்ட் அப்

ஆர்.குமரேசன்

லைகளின் இளவரசி... கோடைவாசஸ்தலமான கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்குப் போகும்போதெல்லாம், ‘நமக்குன்னு இங்க ஒரு இடம் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்‘ என்ற எண்ணம் பெரும்பாலானவர்களின் உள்ளத்தில் உதிக்கும்.

அப்படிப்பட்டவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கொடைக்கானலில் ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது என்பதை அறிய களமிறங்கினோம்.

மற்ற நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் நிலவரத்துக்கும் கொடைக்கானல் ரியல் எஸ்டேட் நிலவரத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

பெரும்பாலும் தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என வி.வி.ஐ.பி.க்களிடம்தான் நகர்பகுதியில் பெரும்பாலான இடங்கள் இருக்கின்றன. உலக அளவில் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத்தலம் என்பதால், அனைத்து அரசுத் துறை சார்பாகவும் இங்கு விருந்தினர் மாளிகைகள் இருக்கின்றன. நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா போன்ற முக்கியமான இடங்களைச் சுற்றியும் உள்ள இடங்களிலும் இவை அமைந்துள்ளன.

கொடைக்கானல் சமவெளிப் பகுதிகளைவிட இங்கே கட்டுமானச் செலவு அதிகம். மற்ற இடங்களைவிட இது வனப்பகுதிக்குள் இருப்பதால், பல்வேறு துறைகளில் தடையில்லாச் சான்று வாங்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
கொடைக்கானலைப் பொறுத்தவரை, சதுர அடிக் கணக்கில் விலை சொல்வதில்லை. சென்ட் கணக்கில்தான் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏரி, பூங்காவைச் சுற்றியுள்ள கமர்சியல் பகுதியில் ஒரு சென்ட் நிலத்தின் குறைந்தபட்ச விலை 15 லட்ச ரூபாய். பல பங்களாக்கள் இங்கு விற்பனைக்கு கிடைக்கின்றன.

இவற்றை விற்பதில் ஒரு பிரச்னை இருக்கிறது. இந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பாலான பங்களாக்கள் வி.வி.ஐ.பிக்களுக்கு சொந்தமானதாக இருப்பதால், விற்பனைக்கு இருப்பதை விளம்பரம் செய்ய முடியாத நிலை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, புரோக்கர்கள் இடத்தின் விலையைக் கூடுதலாக சொல்கிறார்கள். இதனால் வாங்க நினைப்பவர்கள் அதிக விலை தந்து வாங்க யோசிக்கிறார்கள்.

கொடைக்கானலின் குடியிருப்புப் பகுதியாக இருப்பவை நாயுடுபுரம் மற்றும் செண்பகனூரின் ஒரு பகுதி. வி.வி.ஐ.பி.க்கள் அல்லாத உள்ளூர் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இவை. இதில் நாயுடுபுரம் பகுதியில் ஒரு சென்ட் நிலம் 2 முதல் 3 லட்ச ரூபாய் வரை விற்பனையாகிறது.

செண்பகனூரின் ஒரு பகுதி வில்பட்டி பஞ்சாயத்திலும், ஒரு பகுதி நகராட்சிக்குள்ளும் வருகிறது. வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சென்ட் 50 ஆயிரம் முதல் 1.5 லட்ச ரூபாய் வரையும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு சென்ட் 3 முதல் 5 லட்ச ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்