பண்டிகைகளுக்கும் பட்ஜெட் போடுங்க!

அபுபக்கர் சித்திக், வெல்த் ட்ரைட்ஸ் ஃபைனான்ஷியல் பிளானர் (www.wealthtraits.com).

ண்டிகைக் காலம் நெருங்குகிறது. ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என ஒவ்வொன்றாக வந்துகொண்டிருக்கிறது. விழாக்கள் வரும் போது குதூகலம் வந்தாலும் கூடவே செலவும் வரும். இந்தச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல்தான் நம்மில் பலரும் தவிக்கிறோம்.
 
பண்டிகைக் கால செலவுகளை தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கிடைக்கும் சம்பளத்தில் இருந்து எடுத்துத்தான் செலவழிக்கிறோம். இப்படி செய்யும்போது அந்த இரண்டு மாத செலவுகளை சிக்கனமாக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

அதிகத் தொகையை இந்த இரண்டு மாத காலத்திலிருந்து எடுக்க முடியாது என்பதால், குறைவான தொகையையே குடும்ப உறுப்பினர்களுக்காக ஒதுக்கவேண்டிய கட்டாயம் பல குடும்பங்களில் பார்க்க முடிகிறது.

இன்னும் சில குடும்பங்களில் தீபாவளியின் போது தரப்படும் போனஸை வைத்து பண்டிகைக்கான துணிமணிகளை எடுக்கின்றனர். ஆனால், தற்போது பல நிறுவனங்களில் போனஸ் என்பதே கிடையாது. அப்படியே தந்தாலும் மிகக் குறைவாகவே தரப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் அது பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்புதான் கிடைக்கும் என்பதால், அதை வைத்து கடைசி நேர செலவுகளை மட்டுமே சமாளிக்க முடிகிறது. 

பண்டிகையின்போது சம்பளத்திலிருந்து பெரிய தொகையை ஒதுக்கவும் முடியாது, போனஸும் பெரிதாகக் கிடையாது என்பவர்களும் கடன் வாங்கித்தான் பண்டிகைச் செலவுகளை சமாளிக்கிறார்கள். இப்படி வாங்கும் கடனை அடுத்தடுத்த மாதங்களில் சிறிது சிறிதாக வட்டியுடன் திரும்பக் கட்டுகிறார்கள்.

இது மாதிரி ஒவ்வொரு பண்டிகையின்போது செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிப்பவர்கள், அடுத்த ஆண்டு முதல் மனநிறைவு தருகிற மாதிரி செலவு செய்ய எளிய வழிமுறைகள் உண்டு. இந்த வழிமுறைப்படி நாம் நடந்தால், பண்டிகைச் செலவுகள் பற்றி எந்தக் கவலையும்படாமல் இருக்கலாம். அந்த வழிமுறைகள் என்ன?

* வரவுக்குள் செலவை அடக்க முதலில் ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என நம் செலவுகளைத் தெளிவாக திட்டமிடவேண்டும்.

* உருண்டு புரண்டு கடன் வாங்கி, இந்த வருடப் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடிவிட்டு, அந்தக் கடனை அடுத்த வருடம் வரை கட்டுவதைவிட, அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இப்போதிலிருந்தே சிறுகச் சிறுக பணம் சேர்ப்பது எளிதானது; சாலச் சிறந்தது. அதுமட்டுமல்ல,  பண்டிகைகளை யாரையும் எதிர்பார்க்காமல், நம்மிடம் பணம் இருக்கிறது என்ற பலத்துடன் கொண்டாடுவதே கூடுதல் மகிழ்ச்சிதான்.

* இலக்கு இருந்தால்தான் அதை நோக்கி பயணம் செய்ய முடியும். சிறுக சிறுகச் சேமித்தாலும் அந்தத் தொகை குடும்ப உறுப்பினர்களுக்கு போதுமான தாக இல்லாமல் இருக்கலாம். எனவே, நமக்குத் தேவைப்படும் தொகையை நாம் முன்பே நிர்ணயம் செய்து
கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்