இளம் தலைமுறை பிசினஸ்மேன்களை உருவாக்கிய விகடன் ஹேக்கத்தான்!

மு.சா.கெளதமன்

‘‘உங்களைச் சுற்றியுள்ள சமூகத்துக்கு நீங்கள் எப்படி உதவ முடியும் என்று பாருங்கள்; உங்களுக்கான பிசினஸை நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள்’’ என்கிறார் அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா. நம்மைச் சுற்றியுள்ள சமூகப் பிரச்னைகளுக்கு நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்வுகளைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா என, இன்றைய இளந்தலைமுறை தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்தோம்.

380 ஐடியாக்களுடன் துவங்கிய விகடன் ஹேக்கத்தான் பயணத்தில் விவசாயம், கல்வி, சுற்றுச்சூழல், மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, குடிமை வாழ்க்கை ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஐடியாக்களை அள்ளி வழங்கினர். அதிலிருந்து மிகச் சிறந்த 40 ஐடியாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் 140 இளைஞர்களுடன் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் நோக்கத்தில் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி தரமணியில் உள்ள ‘தாட்வொர்க்ஸ்’ (Thoughtworks) நிறுவனத்தில் தொடங்கியது விகடன் ஹேக்கத்தான். முடிவில்,  நான்கு அற்புதமான கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றன. அந்தக்  கண்டுபிடிப்புகளை பற்றி....

1. தானியங்கி முறையில் வயல்களுக்கு நீர் பாய்ச்சுவது! 

வயல்களுக்குத் தேவையான தண்ணீரைப் பாய்ச்சுவது மிக முக்கியமான வேலை. இன்றைய தேதியில் வயலுக்கு நீர் பாய்ச்சும் வேலையை செய்வதற்குக்கூட ஆட்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. அவர்களுக்குத் தரவேண்டிய தினச் சம்பளம் என்பது ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரித்து வருகிறது. தவிர, பயிர்களுக்கு தேவையான தண்ணீரைத் தந்தால் போதும் என்கிற அளவுக்குத் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. 

இந்தப் பிரச்னைக்கான தீர்வாக ஒரு ஆப்ஸை உருவாக்கிக் காட்டினார் கொடுமுடியைச் சேர்ந்த பிரேம்குமார். தானியங்கி முறையில் செயல்படும் இந்த ஆப்ஸ் ஏராளமான விவசாயிகளைக் காப்பாற்றும் பிசினஸ் முயற்சி ஆகும். மண் வளம், மண்ணின் ஈரப்பதம், வானிலைத் தகவல்கள் என பல்வேறு விஷயங்களைக் கண்டறியும் வசதி இந்த ஆப்ஸுடன் இணைக்கப்பட்டிருப்பது இதன்  ஸ்பெஷாலிட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்