எந்தெந்த பங்கு நிறுவனங்களுக்கு லாபம்? - கமாடிட்டி பொருட்களின் தொடர் விலைச்சரிவு...

ஷியாம் சுந்தர் கமாடிட்டி நிபுணர்

பொதுவாக, பங்கு நிறுவனங்களின் செயல்பாடுகள் நன்றாக இருக்க வேண்டும் எனில், அவற்றின் விற்பனை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நிகர லாபமும் அதிகரிக்கும். ஒரு சில துறைகளில், நிறுவனங்களின் விற்பனையில் பெரிய மாற்றம் நிகழாவிட்டாலும்,  நிகர லாபம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றன. இது எப்படிச் சாத்தியம்?

இதற்கான பதில், உற்பத்திச் செலவு குறையும் பட்சத்தில், நிகர லாபம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றன. ஒரு நிறுவனம் தயாரிக்கக்கூடிய பொருட்களின் மூலப்பொருள் விலை சரியும்போது, அதன் பலன் நிகர லாபமாக மாறுகிறது.

எல்லாத் துறைகளிலும் இது சாத்தியமில்லை என்றாலும், கமாடிட்டி பொருட்களோடு தொடர்புடைய நிறுவனங்களுக்கு இது சாதகமான தருணமாகும். உலக கமாடிட்டி பொருட்களின் விலைச்சரிவினால், இவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளும், நிறுவனங்களும் மிகவும் பாதிப்புக்குள்ளானாலும், நம் நாட்டைப் பொறுத்தவரை, சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. கச்சா எண்ணெய், பாமாயில், நிலக்கரி மற்றும் ரப்பர் போன்ற பொருட்கள் 2011-ல் அதிகபட்ச விலையில் வர்த்தகமாகி வந்தன. அந்த நிலை தற்போது மாறி, அவற்றின் விலையானது பாதிக்கும் மேலாக இறக்கம் கண்டுள்ளன.

இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகள் 2014 ஜூன் 21-ம் தேதிக்குப் பிறகு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அன்றைய தினத்திலிருந்து ஆரம்பித்த கச்சா எண்ணெய் விலை இறக்கமானது இன்றுவரை தொடர்கிறது. கச்சா எண்ணெய் விலைச் சரிவு, கடந்த இரண்டு வருட காலமாக பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை லாபகரமாக மாற்றி உள்ளன. 

இந்தியப் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய்க்காக செலவு செய்வதில், இந்திய அரசாங்கமும், இந்திய நிறுவனங்களும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலை மாறி, தற்போது வலுவான நிலைமைக்குத் திரும்புவதைப் பார்க்க முடிகிறது. கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பல்வேறு பொருட்களை மூலப்பொருளாகப் பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் இந்த விலை இறக்கம் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதன் பிரதிபலிப்பாக, இந்த நிறுவனங்களின் பங்கு விலைகளும் ஏற்றங்களைச் சந்தித்து வருகின்றன.

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவிலிருந்து பிரித்தெடுக்கும் பொருட்கள், பொதுவாக பெட்ரோ கெமிக்கல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பொருட்கள் உற்பத்தித் துறை, டெக்ஸ்டைல், பிளாஸ்டிக் உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் பயனளித்து வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்