பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

இண்டெக்ஸ் :

கடந்த வாரத்தில் சந்தை மந்தமாகவே வர்த்தகமானது. சந்தை மந்த நிலையில் இருக்கும் போது இண்டெக்ஸில் டிரேட் செய்வது என்பது சற்றே பிரச்னைக்குரியதுதான். சொல்லப்போனால் கடந்த வாரம் மட்டும் அல்ல, கடந்த செப்டம்பர் மாதம் முழுக்கவே சந்தை மந்தமாகத்தான் வர்த்தகமானது. கடந்த மாதத்தில் ஒரு குறிப்பிட்ட குறுகிய ரேஞ்ச் லெவல்களுக்குள்ளேயே சந்தை வர்த்தகமாகி வந்ததை நாம் பார்த்தோம்.

இந்தச் சந்தை ஏற்றத்தை ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஆகஸ்ட் மாதமும் ரேஞ்சு களிலேயேயே வர்த்தகமாகி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் செப்டம்பர் மாதத்தில் சந்தை ஒரு குறிப்பிட்ட ரேஞ்சுகளுக்குள்ளேயே வர்த்தகமாகி வந்தது. விலை ஏற்றங்கள் குறைவாக இருந்ததால், டிரேட்  செய்வதற்கான சரியான வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பிரச்னையால் எழுந்த பதற்ற நிலை மற்றும் ஆர்பிஐ-ன் 0.25 சதவிகித வட்டி குறைப்பு போன்றவைகளால்  சந்தையின் மந்த நிலை தொடரவே செய்தது. ஒரு விதத்தில் இந்த மந்த நிலையை ஒரு நல்ல பாசிட்டிவ் சிக்னலாக எடுத்துக்கொள்ளலாம். சந்தை மேலும் இறங்காமல் தாக்குப் பிடித்து ஒரு குறிப்பிட்ட ரேஞ்சுகளுக்குள்ளேயே பிடிவாதமாக வர்த்தகமாகி வருகிறது என்பதுதான் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்