நிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை உருவாகலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்  என்றும் ரிசர்வ் வங்கியின் மானிட்டரி பாலிசி ரிவியூவில் வரும் முடிவுகளும் செய்திகளும் நிகழ்வுகளும் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாய் இருக்கும் என்றும்  மீண்டும் 8800 என்ற லெவலைத்தாண்டி மல்ட்டிபிள் குளோஸிங் நடக்காத வரை இறக்கம் நின்று விட்டது என்று எடுத்துக்கொள்ள முடியாத டெக்னிக்கல் சூழலே  சந்தையில் தொடர்கிறது என்றும் சொல்லியிருந்தோம். 8806 மற்றும் 8635 என்ற எல்லைகளுடன் டிரேடான நிஃப்டி, இரண்டு நாள் ஏற்றத்தையும் மூன்று நாள் இறக்கத்தையும் சந்தித்து வார இறுதியில் வாராந்திர ரீதியாக 86 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது.

 மூன்றே டிரேடிங் தினங்களைக் கொண்ட வாரத்தில் நுழையவிருக்கிறோம்.  பொருளாதார டேட்டா வெளியீட்டில் இந்திய இன்ஃப்ளேஷன் டேட்டா வெளிவர இருக்கிறது. டெக்னிக்கலாக வீக்னெஸ் இன்னமும் கனன்று கொண்டு தான் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கே நிலைமை உள்ளது.செய்திகள் நெட்டிவ்வாக இருக்கும் பட்சத்தில் 8510 மற்றும் 8300 என்ற லெவல்கள் வரையிலான இறக்கம் இன்னமும் அருகிலேயே இருக்கிறது என்ற நிலைமையே தொடர்கின்றது.

 செய்திகளை எதிர்பார்க்கும் சூழ்நிலை நிலவுவதால், பெரும்பாலும் டைரக்‌ஷன்லெஸ் சூழலே இருக்கும் எனலாம். வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூமின் மீது கவனம் வைத்தே வியாபாரம் செய்யவேண்டி யிருக்கும். வால்யூம் குறைய ஆரம்பித்தால் வியாபாரத்தினை நிறுத்திக்கொள்வது நல்லது. செய்திகளின் மீது கவனம் வைத்தே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அளவினை குறைத்து வியாபாரம் செய்துகொள்வது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்