தேவை, வளர்ச்சிக்கான விதிமுறை மாற்றங்கள்!

ஹலோ வாசகர்களே..!

தேவை, வளர்ச்சிக்கான விதிமுறை மாற்றங்கள்!

கோவாவில் பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாட்டை ஒட்டி, பிரிக்ஸ் பொருளாதார அமைப்பில் (BRICS Economic Forum) பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். ‘‘உள்கட்டமைப்புத் துறையிலும், மின் உற்பத்தித்  துறையிலும் அதிக அளவில் வாராக் கடன் பெருகக் காரணம், போதுமான அளவுக்கு இந்தத் துறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவராமல் போனதே’’ என்று சொல்லி இருக்கிறார்.

மத்திய அமைச்சர் மனமுவந்து இந்த உண்மையை ஒப்புக்கொண்டதற்காகவே நாம் அவரை மனதாரப் பாராட்டலாம். காரணம், இன்றைக்கு வாராக் கடன் என்பது மலை போல குவிந்து கிடக்கிறது. கொஞ்சநஞ்சமல்ல, வங்கிகளின் வாராக் கடன் அனைத்தையும் சேர்த்தால், அது 8.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. இந்த வாராக் கடனில் பெரும்பகுதி உள்கட்டமைப்பு மற்றும் மின்சக்திகளில்தான் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்