என்ன தேவை...எந்த வகை ஃபண்ட்..?

சேனா சரவணன்

நீங்கள் மொத்த முதலீட்டையும் மியூச்சுவல் ஃபண்டில் போட்டு வைத்திருக்கிறீர்களா..?  நீங்கள் உங்களின் தேவை என்ன என்பதை முதலில் முடிவு செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்களுக்கு எப்போது பணம் தேவைப்படும் என்பதை முடிவு செய்யுங்கள். அதற்கேற்ப மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டையும் மேற்கொண்டால்,  நல்ல லாபத்தை எடுப்பதுடன் ரிஸ்க்கையும் குறைக்க முடியும்.

குறிப்பாக, 3 - 5 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்த பணம் தேவை இல்லை என்கிறபோது, அந்தத் தொகையை பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானத்தைப் பெற முடியும். இந்தப் பணத்தை லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, குறைவான வருமானமே கிடைக்கும். நிதிச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் (லிக்விட் ஃபண்டுகள்) ஓராண்டு காலத்தில் சராசரியாக 8 சதவிகிதமும், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த 3 ஆண்டுகளில் 9 சதவிகிதமும், பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் 12 சதவிகிதமும், ஈக்விட்டி ஃபண்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் 14 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்