‘‘நாங்க மியூச்சுவல் ஃபண்ட் குடும்பம்!’’

உதாரணமாக விளங்கும் ஈரோட்டுக் குடும்பம்!மியூச்சுவல் ஃபண்ட் ஸ்பெஷல்!வீ.மாணிக்கவாசகம்

மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறவர் களிடம்கூட ‘‘நீங்கள் மாதம் எவ்வளவு சேமிக்கிறீர்கள்?’ என்று கேட்டுப் பாருங்கள். ‘‘எங்க சேமிக்கிறது போங்க; வரவுக்கும், செலவுக்குமே பத்த மாட்டேங்குதே!’’ என்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மொத்த குடும்பத்து உறுப்பினர்களும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் சேமித்து வருகிறார்கள் என்றால் ஆச்சர்யம்தானே!
   
ஈரோட்டிலிருந்து சுமார் எண்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது புஞ்செய் புளியம்பட்டி. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு ஊர். இங்கு பெரும்பான்மையானவர்களின் தொழிலே நெசவுதான்.

அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுசெய்து வருகிறார்கள். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தேவராஜனுடன் பேசினோம். ‘‘எனக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பின்னு நாங்க மூணு பேரு. நெசவு அடிச்சாத்தான் சாப்பாடுங்கிற அளவுக்கு ஏழைக் குடும்பம் எங்க குடும்பம். எங்க குடும்பமே வறுமையின் பிடியில் இருந்ததால், ஐந்தாம் வகுப்புக்கு மேல எங்களால தொடர்ந்து படிக்க முடியலே. அதனால எனக்கு விவரம் தெரிஞ்ச உடனேயே நெசவுல உட்கார்ந்துட்டேன். அப்புறம் நாங்க நெசவு செஞ்ச சேலைகளை  நாங்களே விற்க ஆரம்பிச்சோம்.

அதற்கப்புறம் பக்கத்துல இருக்கவங்ககிட்ட நூல் கொடுத்து அந்தப் புடவைகளையும் வாங்கி, நாங்களே மார்க்கெட் பண்ண ஆரம்பிச்சோம். எங்க கடுமையான உழைப்பினால இன்னைக்கு ஓரளவுக்கு வளர்ந்திருக்கோம்.
   
கஷ்டப்பட்டு உழைச்சதால, பணத்தை கண்படி செலவு செய்ற பழக்கம் எங்ககிட்ட இல்லை. முடிஞ்ச வரைக்கும் சேமிக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல நான் ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துல பணம் கட்டிட்டு இருந்தேன். ஒன்பது வருசத்துல 45,000 ரூபாய் கட்டினேன். எனக்கு திரும்பக் கிடைச்சது 52,000 ரூபாய்தான். இன்ஷூரன்ஸ்ங்கிறது ஒரு காப்பீடுன்னாலும் திரும்பக் கிடைச்ச தொகை மனசுக்குத் திருப்தியா இல்ல.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்