மாதம்தோறும் வருமானம் தரும் எம்.ஐ.பி திட்டங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்பெஷல்!கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர், ciicindia.com

முதலீட்டாளர்களுக்கு மாத வருமானம் தரும்  விதமாகச் செயல்பட்டு வரும் மியூச்சுவல் ஃபண்ட் வகை திட்டம், மன்த்லி இன்கம் பிளான் (எம்.ஐ.பி) ஆகும். அதிக அளவு கடன் பத்திரங்கள் (சொத்து மதிப்பில் சுமார் 80%), குறைந்த அளவு பங்குச் சந்தை (சொத்து மதிப்பில் சுமார் 20%) என இரண்டும் கலந்த திட்ட வகை இது.

முதலீட்டின் பயன்கள்!


நீண்ட கால அடிப்படையில் வங்கி எஃப்.டி-யைவிட அதிக வருமானம் பெற வாய்ப்புள்ள முதலீட்டுத் திட்டம் இதுவாகும். வரிச் சலுகை பெற்றுத் தரக்கூடிய திறன் வாய்ந்தது இது. இதில் முதலீடு செய்பவர்கள் பணம் தேவைப்படும்போது, தேவைப்படும் அளவுக்கு எடுக்கலாம்.

 யார் முதலீடு செய்யலாம்?

பணி ஓய்வு பெற்றவர்கள், மாத வருவாய் தேவைப்படுவோர், மொத்தமாக பணத்தை  முதலீடு செய்ய நினைப்பவர்கள், முதலீட்டு மதிப்பில் ஓரளவுக்கான ஏற்ற இறக்கங்களைப் பார்த்து மனம் வருத்தப்படாதவர்கள்.

எப்போது முதலீடு செய்யலாம்?


பங்குச் சந்தை போல்,  அரசுப் பத்திரங்களுக்கும் கவர்மென்ட் செக்யூரிட்டீஸ் மார்க்கெட் உள்ளது. இதில், அரசுப் பத்திரங்கள் வாங்கப்படும் / விற்கப்படும். 10 வருட அரசுப் பத்திரங்களின் வருமானம் அதிகமாக இருக்கும்போது, மன்த்லி இன்கம் பிளான் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. இப்போது 10 வருட அரசுப் பத்திரங்களின் வருமானம் 6.81% (வருமான வரம்பு சுமார் 9% முதல் 4% வரை) ஆக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவற்றின் வருமானம் குறைந்துகொண்டே வருகிறது. மேலும், நிஃப்டி பி.இ குறைவாக இருக்கும்போது, மன்த்லி இன்கம் பிளான் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.  இப்போது நிஃப்டி பி.இ 23 (ரேஞ்ச் சுமார் 10 முதல் 28 வரை) உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்