முதலீட்டுக்கேற்ற பெஸ்ட் இண்டெக்ஸ் ஃபண்டுகள்!

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்பெஷல்!சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆக்டிவ் மற்றும் பேஸிவ் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இந்த இரண்டு ஃபண்டுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்றுதான். ஆக்டிவ் ஃபண்டுகளில் ஃபண்ட் மேனேஜரின் திறமை மிகவும் முக்கியம். பேஸிவ் ஃபண்டுகளில் மேனேஜரின் திறமை அவ்வளவு முக்கியம் இல்லை. பெருவாரியான வேலையை கம்பியூட்டரே செய்து முடித்துவிடும்.

ஆக்டிவ் ஃபண்ட்!

ஆக்டிவ் ஃபண்ட் என்றால் என்ன? துரிதமாக செயல்படும் ஃபண்டுகளை ஆக்டிவ் ஃபண்டுகள் என அழைக்கிறோம். இப்படி செயல்படும் ஆக்டிவ் ஃபண்டுகளில் ஃபண்ட் மேனேஜர் பிரதானமாக இருப்பார். அவருடைய முக்கியப் பணி, அந்த ஃபண்டின் பெஞ்ச்மார்க் குறியீட்டைவிட (benchmark index) அதிக வருமானத்தை ஈட்டித் தருவதாகும்.

உதாரணத்துக்கு, ஏதாவது ஒரு லார்ஜ் கேப் ஃபண்டை எடுத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் அதன் பெஞ்ச்மார்க் குறியீடு நிஃப்டி 50 அல்லது சென்செக்ஸாக இருக்கும். ஆக்டிவ் ஃபண்ட் மேனேஜரின் ஒரே நோக்கம், நிஃப்டி 50 அல்லது சென்செக்ஸைவிட அதிக வருமானத்தை ஈட்டித் தருவதாகும். அதற்காக அவரும் அவருடைய குழுவும் எந்தெந்தத் துறை வரும் காலங்களில் நன்றாகச் செயல்படும், எந்தெந்தத் துறை நன்றாகச் செயல்படாது, அந்தது துறைகளில் எந்த நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டும், எந்தெந்த நிறுவனங்களின் மேனேஜ்மெண்ட் தரமானது போன்ற பலவற்றையும் ஆராய்ந்து அறிந்து முதலீடு செய்வார். ஆகவே ஆக்டிவ் ஃபண்டுகளின் செலவினமும் அதிகமாக இருக்கும்.

மேலும், ஃபண்ட் மேனேஜரின் தனிப்பட்ட திறமையும், அவரின் ஆராய்ச்சிப் பிரிவின் திறமையும் ஃபண்ட் மேனேஜ்மெண்டில் பெரிய பங்கு வகிக்கும். ஆக்டிவ் ஃபண்ட் மேனேஜரின் குறிக்கோள் குறியீட்டைவிட அதிக வருமானம் கொடுப்பதாக இருந்தாலும், சில சமயங்களில் அந்தக் குறிக்கோள், பல்வேறு காரணங்களால் அடைய முடியாமல் போவதும் உண்டு. இதுவரை இந்தியாவில் ஆக்டிவ் ஃபண்டுகள் பெருவாரியான வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு ஈட்டிக் கொடுத்துள்ளன.

பேஸிவ் ஃபண்ட்!


பேஸிவ் ஃபண்ட் என்றால் என்ன? நிஃப்டி, சென்செக்ஸ் என ஏதாவது ஒரு குறியீட்டை (index) அச்சு அசலாக அப்படியே ஃபாலோ செய்வதுதான் பேஸிவ் ஃபண்ட். ஒரு குறியீட்டில், அதாவது இன்டெக்ஸில், எந்தப் பங்கின் விகிதம் எந்த அளவில் உள்ளதோ, அதே அளவில் அந்தப் பங்கை தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துக்கொள்ளும். ஃபண்ட் மேனேஜர் தனது மூளையை அதிகம் கசக்கிப் புழியத் தேவை இல்லை. அதேபோல், ஆராய்ச்சிப் பிரிவுக்கும் அதிலுள்ள அனலிஸ்ட்டுகளுக்கும் அதிகம் வேலை இருக்காது.

ஒரு குறியீட்டிலிருந்து ஒரு பங்கு விலக்கப்பட்டால், பேஸிவ்வாக செயல்படும் ஃபண்டுகளும் தனது போர்ட்ஃபோலியோவிலிருந்து அந்தப் பங்கை விலக்கிவிடும். ஒரு பங்கு புதிதாக அந்தக் குறியீட்டில் சேர்க்கப்பட்டால், பேஸிவ் ஃபண்டுகளும் தனது போர்ட்ஃபோலியோவில், அந்தப் பங்கை, குறியீட்டில் சேர்க்கப்பட்ட அதே விகிதாசாரத்தில் சேர்த்துக் கொள்ளும்.

தற்போது ஒரு குறியீட்டில், ஒவ்வொரு பங்கின் விகிதமும் பல காரணங்களைக் கொண்டு தினசரி மாறுபடும். அவ்வாறு மாறும்போது, பேஸிவ் ஃபண்டுகளும் தங்களது போர்ட்ஃபோலியோவில் மாற்றவேண்டும். அவ்வாறு மாற்றும்போது விலையில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இதை ‘டிராக்கிங் எரர்’ (tracking error) என்று அழைக்கிறோம்.

குறியீட்டு அடிப்படையில்!

பேஸிவ்வாக செயல்படும் பல ஃபண்டுகள், ஒரு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால், இவற்றை இண்டெக்ஸ் ஃபண்டுகள் (index funds) என்றும் அழைக்கிறோம். இ.டி.எஃப்-களும் (ETF – Exchange Traded Funds) ஒரு வகையில் இண்டெக்ஸ் ஃபண்டுகளே!

இவற்றில் பல வகை இருந்தாலும், இண்டெக்ஸை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இ.டி.எஃப்-கள்தான் அதிகம். இ.டி.எஃப்-களை பங்குச் சந்தை மூலம்தான் வாங்க முடியும்; ஆனால், இண்டெக்ஸ் ஃபண்டுகளை டீமேட் கணக்கு இல்லாமலே வாங்கலாம் மற்றும் விற்கலாம். மேலும், இண்டெக்ஸ் ஃபண்டுகளை வாங்குவதற்கு / விற்பதற்கு புரோக்கரேஜ் செலுத்த வேண்டாம். இண்டெக்ஸ் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் வியாபாரம் செய்ய முடியும். இ.டி.எஃப்-களை ஒரு நாளைக்கு பல முறை வியாபாரம் செய்ய முடியும்.

பாசிட்டிவ் பாயிண்ட்ஸ்!

இண்டெக்ஸ் ஃபண்டுகளின் நன்மை என்ன? நாம் மேலே கண்டது போல, ஒரு ஃபண்ட் மேனேஜரின் திறமையையோ அல்லது ஒரு ஃபண்ட் நிறுவனத்தின் திறமையையோ வைத்து இவை செயல்படுவதில்லை. ஆகவே, இந்த ஃபண்டுகளில் ஹ்யூமன் எரர் (human error) என்று சொல்லக்கூடிய மனிதர்கள் செய்யக்கூடிய தவறுகள் மிக மிகக் குறைவு. மேலும், இந்த ஃபண்டுகள் ஒரு பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆகவே, அடிப்படை பொருளாதாரம் நன்றாக இருக்கும் வரைக்கும், இந்த ஃபண்டுகளின் செயல்பாடும் நன்றாக இருக்கும். இந்த வித ஃபண்டுகளின் ஃபண்ட் நிர்வாகக் கட்டணமச் செலவீனங்கள் குறைவு.

இந்த ஃபண்டுகளும் பிற ஆக்டிவ் ஃபண்டுகளைப் போல, எஸ்.ஐ.பி, எஸ்.டி.பி போன்ற அனைத்து வசதிகளையும் வழங்குகின்றன. மேலும், இண்டெக்ஸ் ஃபண்டுகள் ஒரு குறியீட்டை ஃபாலோ செய்வதால், முதலீட்டுப் பரவாக்கம் (Diversification) நன்றாக இருக்கும். அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களில் பல ஆக்டிவ் ஃபண்டுகளை, சிம்பிள் கான்செப்ட்டில் உள்ள இன்டெக்ஸ் ஃபண்டுகள் அதிக வருமானம் தந்துவிடுகின்றன. அது போன்ற பொருளாதாரங்களில் இண்டெக்ஸ் ஃபண்டுகள் குறைந்த செலவீனத்தில் உன்னதமான செயல்பாட்டைக் கொடுக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்