மாறும் முதலீட்டு அணுகுமுறை... - மியூச்சுவல் ஃபண்டைத் தேடிவரும் இளைஞர்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்பெஷல்!ஞா.சக்திவேல் முருகன்

த்து ஆண்டுகளுக்கு முன்பு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பதே பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்தது. இதனால் தங்கம் வாங்குவது, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதையே முக்கியமாக நினைத்தார்கள். இன்னும் சிலர், மோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு இழந்தார்கள். இந்த நிலையில், இன்றைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள், எந்தமாதிரியான ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள தமிழகத்தின் முக்கிய நகரங்களைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகர்களிடம் கேட்டோம். பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேலம் கிளை மேலாளர் கோவேந்தனை நாம் முதலில் சந்தித்தோம். 

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ரியல் எஸ்டேட், தங்கம், வங்கி எஃப்டி போன்றவற்றில் மக்கள் அதிகமாக முதலீடு செய்து வந்தார்கள். இப்போது நீண்ட கால முதலீட்டுக்கு பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். வங்கி எஃப்டி-யைவிட ஒன்றிரண்டு சதவிகிதம் அதிக வருமானம் தருகிறது. மேலும், ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு வருமான வரி இல்லை என்பதால், ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகம் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரிஸ்க் எடுக்கத் தயங்கும் முதலீட்டாளர்கள் மற்றும் வயதானவர்கள், பெண் முதலீட்டாளர் கள் அதிகமாக கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள். சிறிய அளவில் கம்பெனி நடத்துபவர்கள் லிக்விட் ஃபண்டிலும் முதலீடு செய்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வு கூடி இருக்கிறது. ரியல் எஸ்டேட்டிலும், வங்கியிலும் முதலீடு செய்யும் பணத்தை நீண்ட காலத்துக்குப் பின்புதான் திரும்ப எடுக்க முடியும். ஆனால், பத்து பதினைந்து ஆண்டு காலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்கு லாபம் கிடைக்கும் என்பதால், மியூச்சுவல் ஃபண்டின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிகமாக இருந்தது. அப்போது முதலீட்டாளர்கள் வருமானத்தை மட்டுமே பார்த்தார்கள். ஆனால், தற்போது அஸெட் அலோகேஷன் (முதலீட்டை பிரித்து செய்தல்) குறித்து அறிந்து, அதற்கு தகுந்தாற்போல் முதலீடு செய்து வருகிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஆயுள் இன்ஷூரன்ஸுடன் கூடிய முதலீட்டை (யூலிப் பாலிசிகள்) தெரியாமல் தேர்ந்தெடுத்தார்கள். தற்போது முதலீடு வேறு, இன்ஷூரன்ஸ் வேறு என்பதைப் புரிந்துகொண்டு விட்டார்கள். ஒரு லட்சம் ரூபாய், இரண்டு லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதால், எந்தப் பயனும் இல்லை என்பதை அறிந்திருக்கிறார்கள். இந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதில் நாணயம் விகடனும் முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார் கோவேந்தன்.

அடுத்து திருப்பூரைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர் நாகராஜனுடன் பேசினோம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அவர் உற்சாகமாகப் பேசினார்.

“முன்பு மியூச்சுவல் ஃபண்ட் என்றாலேயே எம்எல்எம் என்று நினைத்தவர்களின் எண்ணம் இப்போது நன்றாகவே மாறி இருக்கிறது. ஆரம்பத்தில் இவர்கள் நிறுவனத்தின் பெயருக்கு மதிப்புக் கொடுத்து முதலீடு செய்தார்கள். ஆனால், அவை மற்ற ஃபண்டுகளைக் காட்டிலும் வருமானம் குறைவாக தரும்போதுதான் யோசிக்க ஆரம்பித்து, நன்கு செயல்பட்டுவரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் தற்போது முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். டாப் 30 நிறுவனப் பங்குகளைக் கொண்ட ஃபண்டுகளில் முதலீடு செய்வதைவிட டாப் 100 பங்குகளைக் கொண்ட ஃபண்டுகளில் குறிப்பாக, நடுத்தர மற்றும் சிறு நிறுவனப் பங்குகளைக் கொண்ட மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்கிறார்கள். 2008-ல் அவர்கள் புதிதாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்ததால், முதலீட்டை நஷ்டத்தில் திரும்ப எடுத்தார்கள். தற்போது பங்குச் சந்தையின் ஏற்றத்தாழ்வை புரிந்துவைத்திருப்பதால், முதலீட்டைத் திரும்ப எடுக்காமல், மேற்கொண்டு அதிகம் முதலீடு செய்துவருகிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் செய்யப்பட்ட ஃபண்ட் முதலீடு நல்ல வருமானம் கொடுக்கவே, இப்போது மியூச்சுவல் ஃபண்டுகளில் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை நன்கு  அதிகரித்திருக்கிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்