கேள்வி - பதில்: மனை ஒன்று... பத்திரம் இரண்டு... பிரச்னைக்கு என்ன வழி?

?நான் சமீபத்தில் அப்ரூவல் மனை வாங்கி வீடு கட்டி குடி வந்துள்ளேன். இப்போது அதே மனை தனக்குச் சொந்தமானது என ஒருவர் உரிமை கோருகிறார். அவரிடமும் என்னிடம் இருக்கிற மாதிரியே கிரய ஆவணம் உள்ளது. சமீபத்தில்தான் இந்த விஷயம் எனக்குத் தெரிய வந்தது. இது தெரிந்ததில் இருந்து எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.ஒரே மனையை இரண்டு பேருக்கு விற்றிருப்பார்களோ என்று சந்தேகப்படுகிறேன். கஷ்டப்பட்டு வாங்கிய இந்த சொத்தை காத்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

தரணிதரன், கோவை
வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர், சென்னை

“இரண்டு கிரய ஆவணத்தையும் ஒரே உரிமையாளர்தான் எழுதிக் கொடுத்துள்ளாரா,  இந்த இரண்டில் எந்த ஆவணம் முதலில் எழுதப்பட்டது என்பது இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும்.
உங்கள் பெயருக்கு முதலில் கிரயம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தால், மனைக்கான உரிமை உங்களுக்கு முதலில் வந்து சேர்ந்துவிட்டது என்று அர்த்தம். அதன்பிறகு வேறு நபருக்கு அந்த மனைக்கான பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்டு இருந்தால், அந்தக் கிரயப்பத்திரம் செல்லாது. அந்த மனையில் வீடு கட்டி சுவாதீனத்தில் உள்ளதால், உங்கள் உரிமை மேலும் உறுதிப்படுகிறது. இரண்டாவது கிரயப்பத்திரம் மூலம் உரிமை கோருபவர் நீதிமன்றத்தை அணுகும்போது தக்க முறையில் நீங்கள் பதில் கொடுத்தால் போதும்.”

?என் வயது 35. என் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவின் மதிப்பு ரூ.40 லட்சம். 55 வயதில் கிட்டத்தட்ட ரூ.3 கோடி வேண்டும். இதற்காக இப்போது இருந்தே எவ்வளவு பணம் மாதாமாதம் முதலீடு செய்யவேண்டும் என்பதைச் சொல்ல முடியுமா?


ரமேஷ், கோவை
பாரதிதாசன், நிதி ஆலோசகர்

“இளம் வயதில் 40 லட்சம் ரூபாய்க்கு மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ வைத்திருப்பது நல்ல விஷயம். இந்த  40 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு 12% வளர்ச்சிக் கண்டால், இன்னும் 20 வருடங்களில் ரூ.3.85 கோடியாக பெருகி இருக்கும். எனவே, நீங்கள் புதிதாக எதுவும் முதலீடு செய்ய வேண்டாம். புதிய முதலீட்டை வேறு இலக்குகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.”

?நான் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மாதா மாதம், மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன்.  நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்ய வழிகாட்ட முடியுமா?

வினோத், சென்னை
கா.முகைதீன் மாலிக், நெஸ்ட் ஃபைனான்ஷியல் ஃபிளானர்ஸ், பொள்ளாச்சி

“நீங்கள் மாதம் ரூ.5,000 வீதம் நான்கு வருடத்துக்கு  மட்டுமே முதலீடு செய்ய விரும்புவதால் உங்களுக்கு கீழ்க்கண்ட திட்டங்கள் பொருத்தமானவையாக இருக்கும்.

நீங்கள் கன்சர்வேட்டிவ் (Conservative) முதலீட்டாளராக இருக்கும்பட்சத்தில், ஹெச்டிஎஃப்சி எம்ஐபி லாங் டேர்ம் பிளான் - குரோத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். உங்களுக்கு  ஆண்டுக்கு சுமார் 9% -  10% வருமானம் கிடைக்கும்.

நீங்கள் மாடரேட்  வகை முதலீட்டாளராக இருக்கும்பட்சத்தில்,   பிர்லா சன்லைஃப் எம்ஐபி II வெல்த் 25 - குரோத் ஃபண்டில்  முதலீடு செய்யலாம். முதலீட்டு வருமானம் 10% - 11% வரை எதிர்பார்க்கலாம்.

நீங்கள்  அக்ரெஸிவ்  வகை முதலீட்டாளராக இருக்கும்பட்சத்தில்,  ஐசிஐசிஐ  புரூடென்ஷியல் அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். முதலீட்டு வருமானம் 11% - 12.5% வரை எதிர்பார்க்கலாம்.

ரிஸ்க்கைப் பரவலாக்க இந்த மூன்று ஃபண்டு களிலும் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளலாம்.”

?விவசாயத்துக்காக வங்கியில் டேர்ம் லோன் ரூ.50 லட்சம் கேட்டால் தர மறுக்கிறார்கள். என்னிடம் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக சொத்துகள் உள்ளன. புராஜெக்ட் ரிப்போர்ட் தந்துவிட்டேன். 25% வரை என் பங்கு முதலீடு, அடமானச் சொத்து தரவும் ஒப்புக்கொண்டேன். அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். ஆனால், எந்தக் காரணமும் சொல்லாமல் கடனை நிராகரிக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு என்ன உரிமை உள்ளது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்