மிஸ்டு கால் கொடுங்க... பேங்க் பேலன்ஸை தெரிஞ்சுக்கங்க!

ஞா.சக்திவேல் முருகன்

ங்களுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிய, இனி நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்கிற விவரம் உங்கள் போனுக்கு எஸ்எம்எஸ்-ஆக வந்துவிடும்.

இந்த வசதியினை கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த மிஸ்டு கால் சேவையில் இணைய இணைப்பு தேவையில்லை. வங்கிக்கும், ஏடிஎம்–க்கும் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

ஒவ்வொரு வங்கிக்கு என்று தனியே வழங்கப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணுக்கு, நீங்கள் வங்கியில் பதிவு செய்துள்ள நம்பரிலிருந்து மிஸ்டு கால் தந்தாலே  வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்ற விவரம் வந்துவிடும்.

சில வங்கிகளில் பேலன்ஸ் தொகையுடன் மினி ஸ்டேட் மென்ட் விவரங்களும் எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கின் றன. சில வங்கிகள் பேலன்ஸ் தொகையினை தெரிந்து கொள்ள தனி எண்ணும், மினி ஸ்டேட்மென்ட்டை தெரிந்து கொள்ள தனி எண்ணும் வைத்திருக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்